பக்கம்:பல்சுவை விருந்து.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 95

துடைத்து விட்டன:

. . . . . . . * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

ど奔&j評6\)iT芝。

எடுத்துக் கொண்டு

வாங்கித் தந்த

சுதந்திரம் -

எங்களை திவாலாக

ஆக்கிவிட்ட சேதியை

அறியாத காரணத்தால்தான்.

இன்னமும்

புன்னகைத்துக் கொண்டிருக்கிறாய்

இரத்தினச் சுருக்கமாக நாட்டின் நிலையை - மக்களின் வாழ்க்கை நிலையை - கவிதை எடுத்துக்காட்டி விடுகின்றது.

காதல்: இதனையும், சமுதாயத்தில் நிலவும் பிரச்சினை யாகக் கருதலாம். இதை இன்றைய புதுக் கவிஞர்களில் சிலர் அறிவியல் கருத்துகளோடு கலந்து அளிக்கின்றனர். 'உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது' என்ற ஒரு கவிதை ஒருதலைக் காதலைச் சித்திரிக்கின்றது. இதில் இளைஞன் காதலுக்கு ஒரு பெண் பதில் சொல்ல வில்லை.

காதல்

கிரிக்கெட்டில்

வீசுகின்ற

விழிப்பந்துகளுக் கெல்லாம்.

விக்கெட்

விழுந்து விடுகிறதா என்ன?

என்று பேசும் இளைஞன் மேலும் பேச்சைத் தொடர்கின்றான்.

4. பொய்க்கால் குதிரைகள் - பக்.24.