பக்கம்:பல்சுவை விருந்து.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 101

தயவு செய்து கீழே

இறங்கு என்கின்றோம்!

ஓ... விலைவாசிப் பேயே!

உன்னை ரகசியமாய்

ஒன்று கேட்பேன் -

பதிலைச் சொல் -

'எமர்ஜென்ஸி ,

பூசாரிக்குத்தான்

அடங்குவாயா?

கோவை சாரதன் எழுதிய இக்கவிதை விலைவாசியால் நசித்து வரும் நம் எல்லோரிடத்தும் அங்கீகாரமும் ஒருங்கே பெற்று விடுகின்றது.

கல்லூரிகள் நிலை: கல்வி நிலையே ஒரு சாபக் கேடாகி விட்டது. தகுதியில்லாதவர்கள் அனைத்தையும் பெற நினைக் கின்றனர். எதையும் பண பலத்தால் அடைந்து விடலாம் என்று பெற்றோர் நினைக்கின்றனர். கல்வி நிலையங்களும் வாணிக நிலையங்களாகச் செயற்படத் தொடங்குகின்றன. பல்கலைக் கழகங்களும் இதற்கு விதி விலக்கு இல்லை. மதிப்பெண் பட்டியல் ஊழலே இதற்கு மாபெரும் சான்று. இந்நிலையை விளக்கும் கவிதையின் ஒரு பகுதி,

செந்தமிழ் நாட்டில் தந்திரம் அறிந்தோர்

கல்லூரி கள்.பல காணல் எளிதே!

ஆண்டுதோறும் ஆயிரம் ஆயிரம்

மாணவர் களையே வீணர்கள் ஆக்கிடும்

கல்லூரி களது கதையினைக் கேளாய்!

அந்நாள் வள்ளலின் அரண்மனை முன்னே

தேர்கள் நிற்கும்; ஊர்களின் மன்னர்