பக்கம்:பல்சுவை விருந்து.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பல்சுவை விருந்து

கட்சி மீண்டும் அரசுக் கடிவாளத்தைப் பிடித்துக் கொள்கின்றது. இப்படி வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருப்பதை ஏழைகள் உணர வில்லை. அது அவர்கள் வினைப் பயன் போலும், குடிசை வாழ் மக்கள் சில அரசு ஊழியர்களை, விட நல்ல வருவாய் பெற்றும் வறுமையால் வாடுவதற்கு அவர்கள் குடிப் பழக்கமே முதற்காரணம் ஆகும்; மூலகாரணமும் ஆகும்.

குடிப்பழக்கத்தை கிண்டல் பாணியில் - படிப்போர் மனத்தைத் தொடும் பாங்கில் - "அஸ்தியும் விஸ்கியும்' என்ற தலைப்பில் ஒரு புதுக்கவிதை சித்திரிக்கின்றது.

கரும்பலகையில்

கரியால் எழுதி

கண் தெரியாதவனைக்

கூப்பிட்டுப் படிக்கவிடு -

@l+

குடியைக் கெடுக்குமென

குடிக்கின்ற

புட்டியின்மேல் எழுதி

குடிகாரன் கையிலே

கொடுத்து விடு -

இரண்டும் ஒன்றுதான்!

'கடா மார்க'

சாராயம்!

கருத்து புரிகின்றதா?

எமனைத் திரவமாக்கிப்

புட்டியில்

போட்டு விட்டு

எருமைக் கடா

வாகனத்தை

12. தோணி வருகிறது - பக். 94.