பக்கம்:பல்சுவை விருந்து.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.08. பல்கவை விருந்து

தசாவதாரமே புதைந்து கிடந்தது. அவன் ஒர் சமூக ஊழியன் பேச்சாளன் அரசியல் வாதி சாராய வியாபாரி

இப்படி - எத்தனை எத்தனையோ முகங்கள் அவனுக்கு. எல்லாவற்றையும் விட அவன் ஒரு புரோக்கர்.

எதற்கு?

வாலிபத் தினவெடுத்து

வசீகரப்

பெண் உடம்புகளை

விலைக்குத் தேடும்

ஆண்வர்க் கத்துக்கு

அவன் ஒரு

புரோக்கர்

துறவி யை அவன் சின்ன சின்ன அழகிய சிட்டுகளை அநுபவிக்க வருமாறு அழைக்கின்றான். அதற்குக் கட்டணம் பத்து ரூபாய் தான் என்றும் பகர்கின்றான். இந்தத் தொழில் 'ஆளுயரக் குழாய்களின் உள்ளே நடைபெறுகின்றது என்றும் தெரிவிக்கின்றான். துறவி சொல்லுகிறார்:

நான்

'வியாபாரத்துக்கு

வரலையப்பா

உன்

விநோதமான விமர்சனம்