பக்கம்:பல்சுவை விருந்து.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் i 13

யெளவனம் மங்கலாகத் தெரிந்தது! என்ன தெரிந்தது என்பதைக் கவிஞரே கூறுகின்றார்:

அவர்கள்... ராத்திரியின் பிரகாசங்கள் ரவிவர்மாவின் ஓவியங்கள் வாத்ஸ் யாயனின் உரை நடைகள் அதிவீர ராமனின் ஆலிங்கனச் சிந்தனைகள் வசீகரத்தின் கவிலயங்கள் போகருப தரிசனங்கள்...

அவர்கள் விடியலின் விரோதிகள் கல்யாணப் பந்தலில் நுழைய முடியாத நித்திய கல்யாணிகள் கண்ணிப் புத்திரிகள்.

நிலாவை விசுவாசித்தபடி எந்த விரலையும் வெறுக்காத வாலிப வீணைகள்... எந்தத்_ துறையிலும் நிற்காத காமத் தோணிகள் எவரும் எடுத்துப் படிக்கும் இலக்கியங்கள்... எல்லாவற்றையும் விட அவர்கள்