பக்கம்:பல்சுவை விருந்து.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

திருமூலர் கூட ஒரு காலத்தில் உடம்பினை இழுக்கு என்று கருதினார் உடம்பிற்குள் உறுபொருள் ஒன்று இருப்பதைக் கண்டார் அநுபவத்தால், உடம்புள்ளே உத்தமன் கோவில் கொண்டான் என்று உடம்பினை ஒம்பி வருவதாகக் கூறுகின்றார். பிறிதோர் இடத்தில் 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர் உடம்பை வளர்ப்ப தால் உயிர் வளர்ப்பதாகக் கருதுகின்றார்' நம்மாழ்வார் இந்த உடம்பை 'அழுக்குடம்பு’ என்கின்றார். இந்த உடலில்தான் இறைவன் கரந்து இருப்பதாக ஒருபாசுரத்தில் கூறி அந்த இறைவன் தம்முடைச் சூழலில், அருகில், ஒக்கலையில், நெஞ்சில், தோளில், நாவில், கண்ணில், நெற்றியில், தலையில் இருப்பதாகக் கூறுவர்."

உடலில் கலந்திருக்கும் உயிரின் (ஆன்மா) தன்மைகளைப் பற்றி ஆன்ம நூல்கள் எடுத்துக் கூறும்; உடலோடு சார்ந்திருக்கும் அதற்கு ஏற்படும் பொறாமை, அவா. வெகுளி போன்ற நோய்களையும் அவற்றை நீக்கும் முறைகளையும் நீதி நூல்களும் நுவலும், அருளாசிரியர்களும் தம் அருளிச் செயல்களில் ஆங்காங்குக் காட்டிச் செல்வர். இவற்றை விரிப்பிற் பெருகும்.

இத்தகைய விநோதமான இவ்வுடலில் விநோதமாக எழும் ஒவ்வாமை (Allergy) நிலையை மிக நுட்ப ஊற்றுணர்வு என்றும் வழங்கலாம். ஈண்டு ஒவ்வாமைபற்றிச் சிந்திப்போம். சிலர் சில பொருள்களை ஏற்கும் போது அவர்களது உடல் உணர்வு மிகுதியால் எதிர்வினை புரிதலே ஒவ்வாமை நிலை எனப்படும். ஒவ்வாமை நிலையற்ற மனிதர்கட்கு தீங்கு பயக்காத ஒரு பொருள் ஒவ்வாமை நிலையுடையவர்களிடம் சாதாரண நிலையிலிருந்து மிகத் தீவிரமான அடையாளங்களை ஏற்படுத்தி விடும். ஒருவரிடம் எந்தக் காலத்திலும் ஒவ்வாமை தோன்றி வளர்தல் கூடும். ஆயினும் குழந்தைப் பருவத்தில் அதன் முதல் அறிகுறிகள் தோன்றுகின்றன.

1. திருமந்-மூன்.தந் காய சித்த உபாயம் - 2 2. 6 - 64 - 1

3. திருவிருத் - 1 4. திருவாய் - 1:1:7; 1.9 (பதிகம்)