பக்கம்:பல்சுவை விருந்து.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

எத்தனையோ சூழ்நிலைகளால் புகழ்பெற்ற பெரியோர்கள் தம் வரலாற்றை எழுத அவர்கட்கு இடம் பொருள் ஏவல் சரிப்பட்டு வருவதில்லை. எடுத்துக் காட்டாக 'தென்னாட்டுக் காந்தி' எனப் புகழ்பெற்ற இராஜாஜி அவர்களே தம் வரலாற்றை எழுத வில்லையென்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்வானேன்?

'தன் - வரலாறு எழுதுவோர் தம் வாழ்க்கையில் நேரிட்ட முக்கிய நிகழ்ச்சிகள், தாம் பொது வாழ்வில் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள், அவற்றில் தாம் அடைந்த வெற்றி தோல்விகள், அவற்றைத் தீர்க்க நேரிடுங்கால் தாம் அறியாது - ஆராயாது - மேற்கொண்ட முறைகள், அதனால் தமக்கு ஏற்பட்ட தோல்வி கள், தம் வாழ்வில் தனிப்பட்ட முறையில் தாம் செய்த நற்பணி கள் - இன்னோரன்ன செய்திகள் இடம் பெறுதல் வேண்டும். அவை சுவைப் படவும் சொல்லப் பெறுதல் வேண்டும். தாம் இழைத்த தவறுகளும் அவற்றைத் திருத்திக் கொண்ட முறை களும் வருங்கால் மக்கட்குப் பயன்படுமானால் அவற்றையும் தன் - வரலாற்று நூலில் இடம் பெறச் செய்யலாம். டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களின் 'என் சரித்திரம் இலக்கிய ஆசிரியர்கள் இலக்கியப் பற்றாளர்கட்கே யன்றி மற்றவர்கட்கும் பயன்படக் கூடியது. இங்ங்னமே பொது வாழ்வில் பங்கு கொள்பவர்கட்கு நேருவின் சுய சரிதை'யும் காந்தியடிகளின் 'சத்திய சோதனை'யும் வழிகாட்டிகளாக அமையலாம். டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களின் நான் கண்டதும் கேட்டதும் 'பழையதும் புதியதும் என்பன போன்ற சிறு நூல்களில் காணப்பெறும் நிகழ்ச்சிகள் தன் - வரலாற்று நூலில் இடம் பெற்றால் நூல் சிறப்புறும் எ.டு. 'டிங்கினானே' என்ற நிகழ்ச்சி. ஒலைச் சுவடிகளைத் தேடுவதும் அவற்றைச் சோதித்து வெளியிடுவதுமான பணியே தன் வாழ்க்கைப் பணியாகக் கொண்டவர்கள் டாக்டர் உ.வே.சா. அவர்கள் என்பதை நாம் அறிவோம். அத்தகைய சுவடிகளைத் தேடிச் சென்ற பயண மொன்றில் முதலில் கேட்டதும் பின்னர் கண்டதுமாகும்

இந்நிகழ்ச்சி.