பக்கம்:பல்சுவை விருந்து.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3) பல்சுவை விருந்து

ஒரிரவு அய்யர்வாள் தங்கியிருந்த இடத்தின் அருகிலுள்ள

மைதான மொன்றின் பக்கமாக,

டிங்கினானே

டிங்கினானே'

என்ற ஒலிகள் கேட்ட வண்ணம் இருந்தன. அத்துடன் சதங்கை யொலிகளும் தாள ஒலிகளும், பறையொலிகளும், ஒருவர் குதித்துக் குதித்து ஆடும் ஒலிகளும் கலந்து வந்தன. அய்யர் அவர்கட்கு இச்சொற்றொடரின் பொருள் விளங்க வில்லை. ஒலிகள் வந்த பக்கமாகத் தம் காதினைத் திருப்பிக் கொண்டு மிக உன்னிப்பாகக் கேட்கத் தொடங்கினார். பின்னர்,

'மரத்தைப் பி'

“மரத்தைப் பி'

என்ற ஒலிகள் கேட்டன. தொடர்ந்து,

'வீமன் மரத்தைப்பி'

'வீமன் மரத்தைப்பி' என்ற ஒலிகள் வந்தன. இறுதியாக,

'வீமன் மரத்தைப்பி

டிங்கினானே' என்ற ஒலி கேட்டது. தொடர்ந்து மக்களின் மகிழ்ச்சி ஆரவார மும் கேட்டது. பின்னர், தம் விடுப்பூக்கம் துண்ட, நேரில் ஒலி கேட்ட இடத்திற்கே வந்தார்கள் அய்யர்வாள். அந்த இடத்தில் பாரதத்தில் 'பகாசூரன் வதம்’ என்ற கதை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியை நடத்துவோர் நாட்டுப்புற மக்களின் சுவைக் கேற்பக் கதையை நடத்திக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். இத்தகைய சிறு நிகழ்ச்சிகள் கூட தன் - வரலாற்றில் இடம் பெறலாம். படிப்பதற்குச் சுவையாக இருக்கின்றதல்லவா?