பக்கம்:பல்சுவை விருந்து.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு எழுதுவது எப்படி? 139

மட்டும் திராவிட மொழியினத்தோடு உறவு உள்ளவை என்று சொல்லலாம். பழந்திராவிட மொழிகளைப் பேசி வந்த மக்கள் கையாண்ட அதே வகையான வாக்கிய அமைப்பையே இன்றைய வட இந்திய மொழிகளிலும் காணலாம். மொழியின் மேற்பகுதிகள் எவ்வளவு மாறினாலும் அடிப்படையான வாக்கிய அமைப்பு மட்டும் மாறாமல் இருந்துவரும் என்ற உண்மையே இதற்குக் காரணம். ஆகவே வட இந்திய மொழி களின் வாக்கிய அமைப்பு சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் ஜெர்மன் முதலியவற்றின் வாக்கிய அமைப்போடு ஒத்திருக்க வில்லை. தமிழ் முதலான திராவிட மொழிகளின் வாக்கிய அமைப்போடு ஒத்திருக்கின்றது. இந்த ஒற்றுமை தென்னிந்திய மொழிகளின் நான்கையும் ஆராயும் போது மேலும் தெளிவாகப் புலனாகின்றது. இந்தப் பழங்கால வாக்கிய அமைப்பே பண்டைய தமிழ் இலக்கியம் முதல் இன்றைய சிறுகதை வரையிலும் ஒரே தன்மையாக இருப்பதும் மொழியின் தொடர்ந்த வளர்ச்சியினூடே காணத்தக்க உண்மையாகும்.

போலி முயற்சி: இன்று இந்தியாவில் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளில் தமிழ் மிகப் பழங்காலத்திலேயே பண்பட்ட மொழி. வடமொழி இலக்கிய வளர்ச்சி பெற்ற காலத்திலேயே தமிழும் இலக்கிய வளர்ச்சி பெற்று விளங்கியது. மற்ற மொழிகள் எல்லாம் அதற்குப் பிறகு சில பல நூற்றாண்டுகள் கழித்தே இலக்கியம் பெறத் தொடங்கின. அதனால் தமிழின் வளர்ச்சி பழமை உடையது. தவிர, தமிழின் பழைய இலக்கியம் தமிழகத்தின் நாட்டுப் பாடல்களிலிருந்து மலர்ந்த பாடல்கள். அந்தப் பாடல்களின் செய்யுள் வடிவமும் வேறு எந்த மொழியி லிருந்தும் கடன் வாங்கப்பட்டவை அல்ல. அவை மக்க ளிடையே வழங்கி வந்த நாட்டுப் பாடல்களிலிருந்து வடித்து அமைக்கப்பட்ட வடிவங்களே. அப்படிப்பட்ட பழமையும் தனிமையும் உடைய வளர்ச்சி தமிழ் இலக்கியத்திற்கு இருப்பதைப் பிற்கால வடமொழி அறிஞர்கள் மறந்து விட்டனர். பிற இந்திய மொழிகள் வடமொழியிலிருந்து கடன் பெற்று வளர்ந்தமை போலவே, தமிழும் வளர்ந்தது என்று தவறாகக்