பக்கம்:பல்சுவை விருந்து.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்சுவை விருந்து

3.

5

2

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் (1039) என்று காத்தலை - மேற்பார்வை இடுதலை - விளக்குவார் ஆசிரியர் உழவன் அல்லது பண்ணையார் நாள்தோறும் சென்று நிலத்தைப் பார்த்து வேண்டியவற்றைச் செய்யாவிடில் அவ னுடைய மனைவியைப் போல நிலமகளும் வெறுத்து ஊடி விடுவாள்; எதிர் பார்த்த பயன் கிடைக்காமற் போகும். நிலம் உழைக்க உழைக்கப் பயன்தரவல்லது. வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவாரைப் போல, நிலத்தை வைத்துக் கொண்டு நாம் வறுமையுற்று வருந்துகின்றோம் என்று எண்ணித் தொழில் செய்யாமல் இருப்பவனைக் கண்டால் நிலமகள் தன்னுள்ளே நகுவாள் என்கின்றார் ஆசிரியர்.

இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம்என்னும் நல்லாள் நகும் (1040) என்ற குறளில் இதனைக் காணலாம்.

மருத்துவம்: வள்ளுவர் ஒரு மருத்துவக் கலை நிபுணர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பொன் மொழியைப் பொன்னேபோல் போற்றுபவர். போற்றுவதற்குரிய வழியும் நமக்குக் காட்டுபவர். வந்த பின் காப்பதைவிட வரு முன் காப்பதே சிறந்தது என்பதை நமக்குத் தம் அநுபவத்தால் காட்டுவார். 'மருந்து' என்ற அதிகாரத்தில் மருந்தென வேண்டா வாம் யாக்கைக்கு (942) என்று ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிடுகின்றார். அழுக்காறு, அவா, வெகுளி போன்ற மன நோய்கட்கு பல்வேறு வகையாக மருந்து கூறிய இப்பெருமான் உடலுக்கு வரும் நோய் பற்றிய விவரங்களையும் அவற்றைப் போக்கும் கழுவாய்களையும் அநுபவத்தால் விளக்குவார்.

உடலுக்கு வரும் நோய் பெரும்பாலும் வறுமையாலும் செல்வச் செழிப்பாலும், ஒழுக்க நெறியில் தவறுவதாலும், அறியாமையாலும் வருபவை. செல்வரும் நல்கூர்ந்தாரும் அறியாமையால்தான் தம் உடல் நிலையைக் கெடுத்துக் கொள்