பக்கம்:பல்சுவை விருந்து.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - வாழ்வுச் செல்வம் i55

மெய்ப்பொருள்: கால தத்துவத்தை நிலையாமை என்ற பொருளை விளக்கப் பயன்படுத்துகின்றார் வள்ளுவப் பெருமான், 'நாள்' என்பதை வாழ்நாளை அறுக்கும் - அதுவும் பிறந்த நாள் தொட்டு இறக்கும் வரை இடைவிடாது அறுக்கும் - வாள் என்கின்றார் அப்பெருமான். இக்காலத்துவம் ஆளுக்கு ஆள் மனநிலைக்கு ஏற்ப நேரத்திற்கு நேரம் ஒருவித மயக்கத் தையும் தரும். எடுத்துக்காட்டாகத் திருப்பதிக்குத் திருத்தலப் பயணமாகச் செல்லும் ஒருவர் குழந்தைகளுடனும் குடும்பத் துடனும் அதிக முட்டை முடிச்சுகளுடனும் சென்னை மத்திய இருப்பூர்தி நிலையத்துக்கு பகல் 1.00 மணிக்கு வந்து விடுகிறார். இருப்பூர்தி புறப்படும் நேரம் பகல் 2.20 அந்த வண்டி பகல் 2.00 மணிக்குத் திருப்பதியிலிருந்து வந்து 2.20க்குத் திரும்ப வேண்டியது. அன்று வண்டியும் ஏதோ காரணத்தால் 2.20 வரை வந்து சேரவில்லை. பயணிக்கு வண்டியில் ஏறும் வரைக் காலம் போவது மிக 'மெதுவாகத் தோன்றுகின்றது. போகட்டும். அவரே மற்றொரு நாள் குடும்பத்துடனும் குழந்தையுடனும் பகல் 2.10க்கு நிலையத்திற்கு வந்து சேர முடிகின்றது. வண்டி புறப்படும் நேரம் 2.20 மணி. வண்டியில் ஏறும் வரை பத்து நிமிட நேரம் மிக வேகமாகப் போவதாக உணர்கின்றார். இக் காலத்தை (நாள்) வாள் என்று உணர மாட்டாதார் நமக்குப் பொழுது போகா நின்றது என்று நாளாய் மயக்கலின் காட்டி' என்று கூறுவர் ஆசிரியர் (334-இன் உரை) என்று விளக்குவர் பரிமேலழகர். இந்தக் கால வேகத்தை

நாச்சென்று வாக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் (335) என்ற குறளில் விளக்குவர் வள்ளுவப் பெருந்தகை.

அரசியல்: வள்ளுவப் பெருமான் பொருட்பாலில் கூறும் அரசியல் கருத்துகளாகப் பொது மக்களின் நன்மையைக் கருதி ஆளுதல், ஒற்றுமையை வளர்த்தல், பகையை ஒடுக்குதல், பசியும் பிணியும் நாட்டில் பரவாதபடி காத்தல், நீர்வளம், நிலவளம், தொழில்வளம் முதலியவற்றைப் பெருக்குதல்,