பக்கம்:பல்சுவை விருந்து.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - வாழ்வுச் செல்வம் 157

அறத்துப் பாலில் இல்லறத்தார், துறவறத்தார் மேற்கொள்ள வேண்டிய முறைகளை விளக்குகின்றார். காமத்துப் பாலில் குறிக்கோள் தலைவன் - தலைவியர் வாழ்க்கை முறைகளை விளக்குகின்றார். இவை இலக்கிய இன்பம் போல் படித்து மகிழ வேண்டியவை.

ஆகவே, ஒதற்கெளிதாய் உணர்தற்கரிய விழுப்பொருளாய் இருக்கும் திருக்குறளை ஆழ்ந்து கற்க வேண்டும் நுட்பங்களை உணர்ந்து தெளிய வேண்டும். இப்படித் தெளியும்போது அறத் தினை உணர விழைவார்க்கு ஒரு பேரற நூலாகக் காட்சி யளிக்கும். அரசியலை அறிய விரும்புவார்க்கு ஓர் அரசியல் கையேடாக உதவும். ஞானத்தை விரும்புவார்க்கு ஒரு ஞானப் பெட்டகமாக ஒளிரும். கவிதைச் சுவையை விரும்புவார்க்குக் காவியக் கற்கண்டாக இனிக்கும். அகப்பொருள் சுவையை துய்க்க விழைவார்க்கு ஓர் அக இலக்கியக் கருவூலமாக அமையும். பேரின்பம் விழைவார்க்கு ஒரு பேரின்பக் களஞ்சிய மாகப் பொலிவுறும் வாழ்க்கை நெறியறிய விரும்புவார்க்கு வாழ்க்கை வழி காட்டியாக நின்று நிலை பெறும். இந்நூலை ஆழ்ந்து பயில்வோர் பெரும் புலமையும் நுட்பமும் பெற்றுத் திகழ்வார். ஒவ்வொரு குறள் மணியை உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளத்தை உருக்கும். இதனால்தான்,

எல்லாப் பொருளும் இதன்ப்ால் உளஇன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை. என்று சொல்லிப் போந்தார் மதுரைத் தமிழ் நக்கனார் என்ற. சங்கப் புலவர். நாமும் இந்த நூலை வாழ்வுச் செல்வமாகக் கருதுகின்றோம். படித்துப் பயன் பெறவும் முனைகின்றோம்.

ப.சு - 12