பக்கம்:பல்சுவை விருந்து.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசர் பற்றிய நினைவுகள் 163

திரு. ரங்கபாஷ்யம் IAS, திரு. ரங்காராவ் IAS போன்ற திறமை மிக்கவர்கள் பணியிலிருந்தபோது செயல்பட்ட விதம் அற்புதம், கோப்புகள் அதிவேகமாக நகர்ந்தன. அமைச்சர்கள் பதவிக்காலத்தை விட ஆளுநர் பதவிக் காலத்தில் கோப்புகள் அற்புதமாக நகர்ந்தன. இவற்றையெல்லாம் ஒன்பது ஆண்டுகள் காவடி எடுத்துப் பழக்கமுள்ள நான் அறிவேன். இத்துடன் நிற்க. காமராசரின் "தெய்வப் பணி நாடறிந்தது. நல்லவர்கள் அறிந்தனர். அணு அளவு கூட சுயநலம் அற்ற தெய்வப் பணி ஆற்றிய காரணமாக மதுரைப் பல்கலைக்கழகம், காமராசர் பெய ருடன் வழங்க வேண்டும் என்று 'மக்கள் அரசு' நினைத்தது. 'மதுரை - காமராசர் பல்கலைக்கழகம் என்று காமராசர் பெயர் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. உண்மைத் தொண்டுக்கு நிரந்தர வடிவம் அமைந்தது. தமிழ் மக்கள் உள்ளம் குளிர்ந்தது.

வரலாற்றுணர்வு: பல்கலைக்கழகம் தொடங்கும்போது 'மதுரை - காமராசர் பல்கலைக்கழகம்' என்ற பெயருடன் பல்கலைக்கழகம் தொடங்கப் பெறவில்லை; பின்னால் அவர் பெயர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்றது. 1. இதன் நினைவாக 'மதுரை - காமராசர் என்று பெயர்களுக்கிடையில் ஒரு சிறுகோடு (-) போட்டால் பின்னர் காமராசர் பெயர் இணைக்கப் பெற்றது என்பது தெரியும். 2. அப்படிச் சிறு கோடு போடாவிட்டால் மதுரை காமராசர் (விருதுநகர் காமராசர் போல்) என்று ஒருவர் இருந்து அவர் பெயரால் பல்கலைக் கழகத்தின் பெயர் அமைந்தது என்று கொள்ள நேரிடும்.

மகாத்மா காந்தி பெயரையும் அவர்தம் கொள்கையையும் காங்கிரசுகாரர்களே மறந்தனர். மக்கள் மறப்பதற்குக் காரணம் தேவை இல்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியாகாந்தி என்று பல காந்திகள் தோன்றி விட்ட பிறகு முதல் காந்தி பெயர் அடியோடு மறக்கப் பெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள்கட்கு