பக்கம்:பல்சுவை விருந்து.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பல்சுவை விருந்து

வினைவு காங்கிரசு 1952 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை தொகையினர் இல்லாத நிலை ஏற்பட்டது. இராஜாஜியை நாடினார்கள். புடம் போட்ட தொண்டரின் மூளையல்லவா அவரது மூளை? சில உதிரிக் கட்சியினருக்குப் பதவிகள் தருவ தாக ஆசை காட்டி அவர்களை அலோசியேட் மெம்பாக்கி அறுதி பெரும்பான்மை உண்டாக்கி ஆட்சி அமைத்தார். இரண்டரை ஆண்டு கழித்து அவரைச் சாம்பாரிலுள்ள கறிவேப்பிலையைப் போல் கருதி அதனை எடுத்தெறிவது போல இவரை நீக்கி விட்டார்கள். (அக்காலத்தில் காமராசருக்கும் இராஜாஜிக்கும் இருந்த கருத்து வேறுபாடு மிகவும் வருந்தத்தக்கது) இராஜாஜி அவர்கள் பெரிய பதவி, சிறிய பதவி என்ற வேறுபாடு கருதாமல் தொண்டாற்றிய மகான்.

3. இப்பெருமகன் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் ஒருநாள் காவலர்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். காவலர் சங்கத் தலைவர் இராஜாஜியவர்களை அணுகி "ஐயா, இன்று ஒருநாள் தாங்கள் கோட்டை அலுவலகத்திற்கு வர வேண்டா. நாங்கள் மெய்காப்புக்கு (பந்தோபஸ்துக்கு) வாரோம்' என்று விண்ணப்பிக்க, 'தம்பி, இந்தக் கிழவனுக்கு வீட்டில் பொழுது போகாது. அலுவலகத்திற்கு வந்தால் ஏதாவது கோப்புகளை நோக்கிக் காலம் கழியும். சாலையில் வரும்போது எனக்கு ஏதாவது விபத்து நேரிட்டால் அங்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் காவலர் பார்த்துக் கொண்டு வாளா இரார். கட்டாயம் என்னைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை என்பால் உண்டு. கவலை வேண்டா' என்று சொல்லி அன்று அலுவலகத் திற்கு வந்தார். என்ன செய்தார்? “காவல் சங்கத்தின் அங்கீகாரம் இந்த விநாடி முதல் ரத்து. தமிழகத்திலுள்ள அனைத்து அலுவல கங்களும் படையினர் (மிலிடரி) பாதுகாப்பில் அமையும்' என்ற ஆணை பிறப்பித்தார். காவலர்களின் சர்வ நாடியும் அடங்கிப் போயிற்று. பதவியில் விருப்பு வெறுப்பட்ட நிலையும் நெஞ்சில் உரமும் இருந்தாலொழிய இத்தகைய துணிவு எவருக்கும்