பக்கம்:பல்சுவை விருந்து.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O பல்சுவை விருந்து

cr&ID ea figóirar Max plank Institution Physics crêr, நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் இதன் ஆசிரியராகிய W. Heisenberg என்பாருக்கு ஒருபடி அனுப்ப நினைக்கின்றேன். அணிந்துரை ஆங்கிலத்தில் இருப்பின் நூல் தம்முடையது என்பது அவருக்குத் தெரியும். அணிந்துரை ஒரு சில வாக்கியங் களில் அமைந்தால் கூடப் போதும்' என்று எழுதினேன். ஒரு சிறு அணிந்துரை மறு அஞ்சலில் வந்து விட்டது. அஃது இது:

"Foreword. I can understand the difficulties of a translator of Scientific Books and I tender my congratulations to Prof. N. Subba Reddiar on his having won the prize for the best translation of Heisenlevg's Nuclear physics Madras 29.3.1966 C. Rajagopalachari Q560&s sell to Gus Bioló பதிப்பித்து அந்த நூலின் ஒரு படியை மூல நூலாசிரியருக்கு அனுப்பி மகிழ்ந்தேன், பெரு மிதமும் கொண்டேன். (அப்போது நான் திருப்பதியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்).

5. இந்தி எதிர்ப்பு: 1937-இல் (பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில்) நம் இராஜாஜி சென்னை மாநிலத்துக் காங்கிரசு முதல் அமைச்சர். கட்சிக் கொள்கைப்படி மாநிலத்துப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாகப் புகுத்தப் பெற்றது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு தந்தை பெரியார், கி.ஆ.பெ. விசுவநாதம் முதலியோர் எதிர்ப்பில் பங்கு பெற்றனர். இராஜாஜி என்ற அமைச்சரிடமுள்ள இராஜாஜி என்ற மனிதர் செயற்பட்டார். சில மாற்றங்களுடன் இந்தத் திணிப்பு செயற்படுத்தப் பெற்றது. 'எல்லாப் பள்ளிகளிலும்' என்றிருந்த திட்டம், 125 பள்ளி களிலும் (பரீட்சார்த்தமாக) என்று ஆயிற்று. படிக்க வேண்டி யதும் முதல் மூன்று படிவங்களில் தாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. திட்டம் பிசுபிசுத்தது. இராஜாஜி மக்கள் நாடியை அறிவார். ஏனைய காங்கிரசுகாரர் போல் திமிர் பிடித்தவர் அல்லர். இங்கிதம் அறிந்த ஒரு மகான்.