பக்கம்:பல்சுவை விருந்து.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாஜி பற்றிய நினைவுகள் 173

வழியும்படியான கூட்டம். முன்வரிசையில் தந்தை பெரியாரும் இராஜாஜியும் அருகருகே அமர்ந்திருந்தனர். மண்டபத்தில் நுழைந்த அண்ணா இவர்களைக் கண்டவுடன் அருகே சென்று காலைத் தொட்டு வணங்கும் பாணியில் குனிந்து முதலில் தந்தை பெரியாரையும் அடுத்து இராஜாஜியையும் வணங்கி விட்டு மேடைக்குச் சென்றார். மண்டபம் அதிரும்படியாக அவையோர் கைதட்டி ஆர்த்தனர். பேசத் தொடங்குமுன் அண்ணா 'நான் ஏன் அவர்களை வணங்கினேன் தெரியுமா? அவர்கள் இருவரும் என் அரசியல் குருமார்கள். நான் தாடியுள்ளவரிடம் 'காலில் முள் தைத்து விட்டது. வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?’ என்று கேட்டால், காலை எடுத்து விடு; வேறு கால் வைத்து விடு' என்று சொல்வார். அருகிலுள்ள இராஜாஜியைக் கேட்டால் கவனத்துடன் முள்ளை நீக்கி டிங்க்சர் அயோடின் போடு, சரியாய் விடும் என்பார். இதுதான் இவர்களிடம் நான் காண்பது' என்று சிரிக்காமல் சொன்னார். கட்டடம் விழுந்து விடுமோ? என்று அதிருமாறு மீண்டும் அவையோர் கையொலி எழுப்பிச் சிரிப்புடன் ஆர்ப்பரித்தனர். இங்கு எனக்கு மூவருடைய மனப்பான்மையையும் தெளிவாயிற்று.

11. நேர்மை, தூய்மை: நாட்டு நலம், மக்கள் நலம் என்று அரசியல் இயங்காமல், சாதி, அரசியல், குடும்ப அரசியல் என்ற பாணியில் இன்று இயங்குவதைக் காணும் நமக்கு இராஜாஜி அவர்கள் நேர்மையுடனும் தூய்மையுடனும் பணியாற்றிய பெருமையை மக்கள் கண்டனர். அமைச்சர் பதவியில் இருந்த காலத்தில் பரம்பரையாக வாழ்ந்து வந்த தி. நகர் பகலுல்லா சாலையிலுள்ள தம் சிறு வீட்டில்தான் வாசம். தம் மகன் நரசிம்மன் முன்னேற்றத்தில் எந்தவிதமான முயற்சியும் எடுக்க வில்லை. 'அவனது தொண்டால் அவன் உயரட்டும்' என்று வாளா இருந்து விட்டார். மகனும் தன் சேவையில் எம்.பி.வரை உயர்ந்தார். இராஜாஜி நினைத்திருந்தால் தம் மகனை மத்திய அமைச்சரவையில் இடம் பெறச் செய்திருக்கலாம். ஆனால்

u.a5 – 13