பக்கம்:பல்சுவை விருந்து.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே’ என்றும் வருவதைக் காணலாம்.'

இன்று 'சாதி என்னும் சொல் பிறப்பிலேயே வேற்றுமை உண்டு என்பதைக் குறிப்பதாகும். பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கை தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாட்டில் இல்லை. தொழில், ஒழுக்கம், கல்வியறிவு, திறமை என்ற இவற்றின் காரணமாகவே வகுப்புப் பிரிவுகள் தோன்றின. நாளடைவில் மக்கள் செய்யும் தொழில்களில் பெருமை சிறுமை பாராட்டத் தொடங்கினர். இவையே உயர்வு தாழ்வுகட்கு உறைவிடமாயின. வேத உபநிடத சுமிருதிகளும் இவ் வுண்மையை ஒப்புக் கொள்கின்றன. சாதிப் பிரிவுகள் தமிழகத்தில் தாமே தோன்றியனவே யன்றி யாராலும் புகுத்தப் பெற்றவையல்ல என்றே தோன்றுகின்றது.

'நால்வகைச் சாதி

இந்நாட்டினில் காட்டினீர்

என்ற கபிலரகவலைச் சான்றாகக் கொண்டு வேண்டாதார்மீது வீண் பழி சுமத்துவது அறிவுடைமைக்கு அழகன்று. இன்றுள்ளது போல் அன்றும் சாதிப் பிரிவு பொருளாதார அடிப்படையில் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் தத்தம் அறிவுத் திறனுக் கேற்றவாறு பல தொழில்களை மேற்கொண்டு பொருளீட்டி வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலையும் மேற்கொண்டவர்கள் தமது தொழில் முறைக்கேற்ப அத்தொழில் செய்வாரிடமே கொண்டு கொடுத்து வந்து நாளடைவில் வெவ்வேறு குலத்தினராகி இருக்க வேண்டும். காலப் போக்கில் அது தொடர்பற்ற வெவ்வேறு குலமெனக் கருதும் நிலை வந்துவிட்டது. ஒவ்வொருவரும் தம் பேதைமையால் 'குலப் புராணம் பாடும் இயல்புடையவராக மாறி விட்டனர். எனவே சாதிப் பிரிவிற்கு எந்த ஒரு வகுப்பாரும் பொறுப்பாளர் அல்லர் என்றே தோன்றுகின்றது. இத்தகைய சாதிப் பிரிவுகளால்

2. மேல் - நூற் 64. 3. சாதி - ஜாதி, ஜம் - பிறப்பு. ஜனித்தல் - பிறத்தல். ஜன்மம் பிறப்பு.