பக்கம்:பல்சுவை விருந்து.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O பல்சுவை விருந்து

சாதியும் சமயமும் மதமும் தவிர்த்துச் சுத்தச் சன்மார்க்க வீதியில் தாம் நிறுவுவதாக மக்களை நோக்கி அழைப்பதை,

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர்! சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

சத்தியச் சுத்தசன் மார்க்க வீதியில் உமைத்தான் நிறுவல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே,

- 5 (முடி) தனித்திரு மாலை (9) 21 நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலான கலைச் சரிதம் எல்லாம் 'பிள்ளை விளையாட்டு என்றும், தோல்வருணம்' கண்டு மேல்வருணம் அறிவார் இல்லை என்றும் கூறுவதை,

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் எல்லாம்

நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்துபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே கால்வருணம் கலையாதே வீணில்அலை யாதே

காண்பனனல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே மால்வருணம் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.

- 6 (இடை) அருள்விளக்க மாலை - 85. என்ற பாடலில் கண்டு மகிழலாம்.

'எம்குலம் எம் இனம்' என்பதை

4. தோல் வருணம் - உடல் தோலின் நிறம். மேல் வருணம் - சாதி,