பக்கம்:பல்சுவை விருந்து.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி ஒழிப்பு 181

'எம்குலம் எம்மினம் என்பதோண் ணுற்றாறு அங்குலம் என்றருள அருட்பெருஞ் சோதி

- அருட்பெருஞ்சோதி அகவல் அடி (219–220)

என்று காட்டுவார். தொண்ணுற்றாறு அங்குலம் என்றது உடம்பை, உடம்பு அவரவர்கையால் எட்டுச் சாண். ஒரு சாண் - பன்னிரண்டு அங்குலம். எட்டுச் சாண் = 96 அங்குலம். 'எம்குலம் எம் இனம்' என்பது எண்சாண் (96 அங்குலம்) உடம்புக்கேயன்றி அவ்வுடம்பின் உறுபொருளாகிய உயிருக் கன்று என்பது கருத்து. இதனை அருட் பெருஞ்சோதியே (கடவுளே) தனக்கு அருளிற்று என்பார் என்றருள் அருட் பெருஞ்சோதி என்றார். அந்த அருட்பெருஞ்சோதியை,

சாதியும் மதமும் சமயமும் காணா ஆதிஅ நாதியாம் அருட்பெருஞ் சோதி

- மேலது. அடி (115-115) என்று கூறுவார். சாதியும் மதமும் சமயமும் அருட்பெருஞ் சோதியைக் காணத் துணை செய்யாது. அருட்பெருஞ் சோதியைச் சாதியாலும் மதத்தாலும் சமயத்தாலும் காண இயலாது என்பது கருத்து. இந்த அருட்பெருஞ்சோதியே. ஆதியில் இவை அனைத்தும் பொய் என்பதாக உணர்த்தியதை,

சாதியும் மதமும் சமயமும் பொய்என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி,

- - மேலது. அடி (211-212) என்று காட்டுவார். இவற்றை எல்லாம் தவிர்த்துத்தான் இறைவன் தன்னை மேலேற்றினான் என்பதை,

சாதிகுலம் சமயம் எலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம்

ஆம்உயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே

5. எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்ற உலக வழக்கை உன்னுக.