பக்கம்:பல்சுவை விருந்து.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி ஒழிப்பு 133

அடிகள் இறைவனை அழைப்பதை,

ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி

அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே ஒதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே

உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்

சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே சாதியும் சமயமுந் தவிர்த்தவர் உறவே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே

- 6 (இடை) சற்குரு மணிமாலை - 20 என்ற பாடலில் கண்டு மகிழலாம். உள்ளம் குழைந்து அடிகள் உறவாடுவதை உளமார அநுபவிக்கலாம்.

இறைவன் சாதி முதலியவற்றைக் கடந்த தனிப் பெரும் பொருள் என்பதை,

ஆதியும் அந்தமும் இல்லாத்

தனிச்சுட ராகிஇன்ப நீதியும் நேர்மையும் ஒங்கப்

பொதுவில் நிருத்தமிடும் சோதியும் வேதியும் நான்அறிந்

தேன்இச் செகதலத்தில் சாதியும் பேதச் சமயமும்

நீங்கித் தனித்தனனே.

- 5 (முடி) சிவானந்தப்பற்று - 6 என்ற பாடலில் தெளிவாகத் தெளிவிப்பார்.

இங்ங்னம் சாதி சமய வேறுபாடுகளைக் கடிந்து, கண்டித்து, அடிகள் அருளிய பாடல்கள் அவர்தம் திருவருட்பா பலவாகும். அடிகளின் திருமுன்னர் சாதி வேற்றுமைக்கு இடமே இருந்த தில்லை. பார்ப்பனர் சபாபதி சிவாச்சாரியர் முதல் பறையன் அமாவாசை வரை எல்லாச் சாதியாரும் அடிகளிடம் சமமாகப்