பக்கம்:பல்சுவை விருந்து.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பல்சுவை விருந்து

பழகி ஒழுகினர். முன்னவர் தம் பூனூலையும் சிகையையும் நீக்கி விட்டு அனைவருடனும் சமமாகப் பழகி ஒரே பந்தியில் உண்டு வந்தார். இவ்வாறு வள்ளல் பெருமான் ஆன்மிக நெறிக்கு சாதி மத சமய சாத்திரங்கள் முதலியவை பெருந் தடைக் கற்கள் என்பதை மன்பதைக்குக் காட்டி அவற்றைத் தவிர்த்தார்; கடிந்தார். ஒழித்துக் கட்ட ஒல்லும் வகையெல்லாம் முயன்றார். இஃது ஒரு வகையில் ஆன்ம நெறியில் ஒழுகுவார்க்கு அமைதி யாகக் காட்டப் பெறும் ஒருவகைச் சாதி ஒழிப்பு ஆகும்.

2. தந்தை பெரியார்: தந்தை பெரியார் காட்டும் சாதி ஒழிப்பு முறை உலக வாழ்க்கை பற்றியதாகும். அமைதியான உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத நெறியுமாகும். சாதி வேறு பாட்டிற்கு மூலகாரணம் கடவுள் என்று கருதி அதனை முதலில் ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர் தந்தை பெரியார். இதனால் இவர்தம் அணுகுமுறை சற்று வேறுபட்டதாகின்றது. ஒரிடத்தில் 'நான் தீவிர சீவாதார எண்ணமுடையவன். எனக்குச் சாதி என்பதோ, சாதி என்பதன் பெயரால் கற்பிக்கப்பெறும் உயர்வு தாழ்வுகளோ இல்லை. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப் பவன். ஆதரிப்பவன் அல்லன்' என்று கூறுவார். சிறு வயது முதற் கொண்டே இதனைக் கருதுபவர் இம்மகான். சுமார் நாற்ப தாண்டுக் காலத்திற்குமேல் சாதிய ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும், சாத்திரம் ஒழிய வேண்டும்' என்று சொல்லி யும் எழுதியும் வந்தவர். வாய்ப் பேச்சுடன் நிற்காமல், கடவுள் ஒழிய வேண்டும் என்பதை பிள்ளையார் சிலைகளை நடுத் தெருவில் போட்டு உடைத்தார். இராமர் படத்தைச் செருப்பால் அடித்தார். அதனைத் தீயிட்டுக் கொளுத்தினார். இராமாயணம், கீதை, மனுதர்மம் போன்ற நூல்களை நெருப்பில் போட்டு மக்கள் முன் பொசுக்கினார். தமக்கு வந்த அமைச்சர் பதவி, ஆளுநர் பதவி ஆகியவற்றையெல்லாம் உதறித் தள்ளி விட்டு நாற்பதாண்டுக் காலத்திற்கு மேல் கடவுள் சாதி ஒழிப்புக்காகப் பாடுபட்டு வந்த மாபெரும் மனிதர் இவர், ஈரோட்டிலுள்ள