பக்கம்:பல்சுவை விருந்து.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பல்சுவை விருந்து

கல்வியில் அக்கறை காட்டி வருபவன். அத்தகைய மனப்பான் மையை அளித்துள்ளான் அடியேனுக்கு இறைவன்.

அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள் இவை செயற்படு வதைக் கவனித்தால் அதை சாதி அடிப்படையில் இயங்குகின்றன என்பது தெரிய வரும். சாதி வேறுபாடு ஒழிய வேண்டும் என்று ஒரு புறம் கூறிக் கொண்டு சாதி இருப்பை நிலை நாட்டும் போக்கில் நடைபெறுவதைக் கவனிக்கும்போது இங்ங்ணம் முரண் பட்ட கொள்கைகளைக் கடைப்பிடிப்பதைக் கண்டு படிப்பறிவில்லாத வர்களின் ஏளனத்திற்குக் கூட இடம் அளிக்கின்றது. சாதிச் சங்கங்கள் பெருகி வருவதையும் காண் கின்றோம். சமூகத்தின் இந்த நிலையைக் கண்டு வாக்காளர் வங்கியை நம்பும் அரசியல் வாதிகள் தேர்தலில் சாதி அடிப்படையில் ஆட்களை நிறுத்துகின்றனர். வெற்றியும் பெறுகின்றனர். இவர்களே பின்னர் சாதி வேறுபாடு கூடாது என்று "வாய்ச் சவடால் அடித்துக் கொண்டு சாதி இருப்பை நிலை நிறுத்தும் செயல்களைச் செய்து வருகின்றனர்.

மனித இனத்தில், அறிவியல் அடிப்படையில் நோக்கினால், சாதிகள் இல்லை. கோவை ஆலைகளில் பருத்தியால், அல்லது வேறு பொருள்களாலான ஆடைகள் உற்பத்தியாகின்றன. வெளி வந்த துணிகளின்மீது பெயர்களை அச்சிட்டு துணிகளை வேறுபடுத்திக் காட்டுகின்றனர். மனிதன் பிறக்கிறான். பிறக்கும் போது சாதி அடையாளம் இல்லை. பின்னர் பெற்றோர் சாதி முத்திரை இடுகின்றனர். இதனை,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள்,355) என்ற மெய்யுணர்தல் அதிகாரத்திலுள்ள குறளுக்கு உரை காணும் பரிமேலழகர் உரையில் இக்குறிப்பு காணப் பெறு கின்றது. 'பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது,