பக்கம்:பல்சுவை விருந்து.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

复9鲁 பல்சுவை விருந்து

பசுவேறு, எருமை வேறு இதில் காளை புணர்ந்து எருமை யில் கரு உண்டாவதில்லை. எருமைக் கடா புணர்ந்து பசுவிடம் கரு உண்டாவதில்லை. பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல்போல மாந்தரில் பேத வடிவு காணப் பெறவில்லை.

பூசுரர் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற

புத்திரர் ஆயினோர் பூசுரர் அல்லரோ?” என்று கேட்கின்றார். இதனால் மாந்தர் யாவரும் ஓர் இனம் என்பது உறுதிப்படுகின்றது. மாந்தரில் சாதி இயற்கையன்று; செயற்கை. நாமே இட்டது என்பது பெறப்படுகின்றது. எனவே மானிடத்தில் சாதி வகை இல்லை என்பது உண்மை. அதனைக் களைவது அறிவுடைமையாகும்.

இன்னொரு புதுக் கவிதை, ஒரு பக்தன் தன் அருகே வந்த நாயை அடித்துத் துரத்தி ஆண்டவனைத் தரிசிக்க ஆலயத் துக்குள் புகுகின்றான். அவனைப் பார்த்து கவிஞர் பேசு கின்றார்."

நாயும் கடவுளும்

ஒரே பிரம்மம்தான்

என்பதை அறிவாயோநீ?

வேண்டுமானால்

அந்த இரண்டுக்குமுரிய

ஆங்கிலச் சொல்லின்

எழுத்துகளை

மாறிப் போட்டுப்பார்."

7. மேலது - அடி (78-79) 8. கோதண்டம், கொமா. கோழிக் குட்டிகளும் பன்றிக் குஞ்சுகளும் பக்.23 9. Dog -God