பக்கம்:பல்சுவை விருந்து.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைணவ சிகரப் பேரொளி 195

திருப்பெயராலும் வழங்கி வருகின்றது. உடையவரின் புகழ்க் கோபுரமாகவும் திகழ்கின்றது.

இராமாநுசருக்கு வலக்கையாக இருந்த கூரத்தாழ்வானும் அபிமானப் புத்திரனாகத் திகழ்ந்த பிள்ளையுறங்கா வில்லிதாசரும் இக்காலத்தில் ஒருவர்பின் ஒருவராகத் திருநாடு அலங்கரித்தனர். இந்த நிகழ்ச்சிகளும், வேறு சிலவும் இராமாநுசருக்கு உலக வாழ்வில் அருசி ஏற்படக் காரணமாயின. இவருக்குப்பின் இத்தரிசனத்தை வளர்க்கத் தக்கவர் பராசரபட்ட ரென்பது உறுதியாயிற்று. இராமாநுசரே இதனை பாகவதர்கட்குச் சுட்டிக் காட்டினார். பிள்ளானையும், கிடாம்பியாச்சானையும் அழைத்துச் சில சிறப்பான பொருள்களை அருளிச் செய்தார். இவர்கள் வாயிலாக இத்தரிசனம் நிலை நிற்கும் என்பது அரங்க நகர் அப்பனின் திருவுள்ளம் என்பதையும் தெரிவித்தார். கோயிலுக்கு நேரே பிள்ளான் மடியில் திருமுடியும், கிடாம்பி ஆச்சான் மடியில் திருவடியுமாகக் கண் வளர்ந்து மீளா உலகம் புகுந்தார். ஆயினும் இன்றும் திருவரங்கத்தில் தானேயான அவர்தம் திருமேனியைச் சேவிக்கலாம். இவரது திருவுருவம் காஞ்சியில் நடாதுராழ்வானால் பிரதிட்டை செய்யப்பெற்றது. திருப்பதி திருமலை, வேறுபல திருப்பதிகளிலும் இவரது திருமேனி பிரதிட்டைச் செய்யப் பெற்றது. இராமாநுசர் மறைந்தும் மறையாத சோதியாக வைணவச் சிகரப் பேரொளி யாகத் திகழ்கின்றார்.

နွှဲနိူင္ငံ A論N