பக்கம்:பல்சுவை விருந்து.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 பல்சுவை விருந்து

இன்று எத்தனையோ மக்கள் தமக்குப் பொழுது போக வில்லை என்றும், எத்தனையோ மக்கள். பொழுது விரைவாகப் போய்விடுகிறதென்றும் கூறுவதை நாம் அறிகிறோம். பல துறைகளிலும் இவ்வாறு கூறும் மக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பிற்பகல் 12 மணிக்குக் கிளம்பும் இருப்பூர்தியைப் பிடிப்பதற்குக் காலை 10 மணிக்கே நிலையத்திற்கு வந்து விடுபவர்களுக்குக் காலம் விரைவாகப் போவதில்லை; வண்டி புறப்படுவதற்குப் 10 நிமிடங்களுக்கு முன்னர் வருபவர்களுக்கு கியூ வரிசையில் நின்று பயணச் சீட்டு வாங்கி வண்டியைப் பிடிப்பதற்குள் காலம் வேகமாகப் பறந்து விடுகிறது. காலம் விரைவாகச் செல்லுவதும் மந்தமாகச் செல்லுவதும் அவ்வப்போது அவரவர் மனப் பான்மையைப் பொறுத்தது. ஆனால் இருவருமே தமது வாழ்நாளில் ஒருபகுதி இவ்வாறு கழிகிறது என்பது உணர்வதில்லை. நாள், மணி என்பதெல்லாம் நாம் கொண்ட மயக்கம் என்பதை மெய்யுணர்வு பெற்றவர்களால்தான் அறிய முடியும். நாள் என்றும் மணி என்றும் கொள்ளுவது காணலை நீர் என்று கொள்ளுவது போலாகும். இதைப் பரிமேலழகர், அது தன்னை (காலத்தை) வாள் என்று உணரமாட்டாதார் நமக்குப் பொழுது போகா நின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்க்லிற் காட்டி' என்று நாயனார் நவின்றிருப்பதாக எடுத்துக் காட்டுகிறார்.

நாள் என்று நாம் கொள்ளும் காலப் பகுதி நமது வாழ் நாளை இடைவிடாது அறுக்கக் கூடிய வாள் என்பதை நம்மில் பெரும்பாலோர் உணர்வதில்லை. ஒரு மரத்தையோ பிற பொருளையோ அறுக்கும் வாளுக்கு ஒய்வு உண்டு. அறுப்பவர் கைகள் தளர்ச்சியுறும் போதும், அறுப்பவர் உணவு கொள்ளும் போதும், உறங்கும் போதும் பிற நேரங்களிலும் வாள் அறுக்காது நிற்கிறது. ஆனால் காலத்தின் பகுதியாகிய நாள் என்ற வாள் அல்லும் பகலும் ஒய்வின்றி நமது வாழ்நாளை அறுத்துக் கொண்டேயிருக்கிறது. இங்ங்னம் இடைவிடாது அறுத்துக் கொண்டிருப்பதை மக்கள் கூட்டம் உணர்வதே இல்லை.