பக்கம்:பல்சுவை விருந்து.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் வள்ளுவம் 19

இதையே பரிமேலழகர் இடை விடாது ஈந்தலால் வாளின் வாய தென்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியராகலின் உணர்வாற் பெறின்' என்றும் கூறினார், (வள்ளுவர்) என்று கூறியிருப்பது இவ்விடத்தில் கருதத் தக்கது. யோசித்துப் பார்த்தால் பலவியத்தகு பொருள்களை எல்லாம் தரவல்ல பல குறள்மணிகள் திருக்குறள் என்ற பெட்டியினுள் இருக்கின்றன.

வாழப் பிறந்தோம்! என்ற உண்மையை எல்லாமக்களும் அறிந்துதான் இருக்கிறார்கள். எல்லோருமே உயிரை வெல்லம் போலக் கருதுகிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே. அதிகச் சம்பளம் வேண்டும் என்று இன்று கூட்டங்கள் போட்டுக் கதறு கின்ற மக்கள் கூட்டங்களை நாம் காணத் தானே செய்கிறோம்! எத்தனை கட்சிகள் எவ்வளவு கொள்கைகள் எத்தனை விதமான திட்டங்கள்! குறிக்கோள்கள்! அம்மம்ம அவை சொல்லுந்தரமன்று. பொருளாதார நிலை சரிப்பட்டு விட்ட தாகவே கொள்வோம். எவ்வளவு பேர் வள்ளுவர் காட்டிய வாழ்க்கை நெறியில் செல்ல வேண்டும் என்று எண்ணுகிறார்கள்! பெரிய செல்வ நிலையில்தான் இருப்பவர்கள் வள்ளுவர் காட்டிய நெறி நின்று வாழ்கிறார்களா? ஆகவே, யோசித்துப் பார்த்தால் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு பொருளாதார நிலை ஒரு காரணமல்ல. வாழவேண்டும் என்ற மனப்பான்மை தான் வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? நல்லோர் தொடர்பும் நற்சிந்தனையும் வேண்டும்; வள்ளுவர் அருளிய நூலை நன்கு படிக்க வேண்டும். படித்து விட்டால் மட்டும் போதுமா? நன்கு சிந்திக்கவும் வேண்டும்.

உயிர்நூல் போன்ற அறிவியல் அறிவின்படி இவ்வுலகில் உயிர் இயங்கத் தொடங்கியதிலிருந்து ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி ஆகிய ஐந்துணர்வுகளும் முறையே ஓரறிவு பிராணி முதல் ஐயறிவுள்ள பிராணி வரையில் உண்டாயிற்று என்றும் இவை தோன்றும்போது தான் அதற்கேற்றவாறு அப்பிராணிக ளிடம் இவற்றை அறியும் புறக்கருவிகளும் அகக் கருவிகளும் உடலில் தோன்றத் தொடங்கின என்றும் நாம் அறிகிறோம்.