பக்கம்:பல்சுவை விருந்து.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் வள்ளுவம் 21

பல கவிஞர்கள் இந்நூலிலுள்ள பல குறள்மணிகளை யெடுத்துத் தமது நூல்களில் பதித்து அழகு செய்திருக்கிறார்கள். சிலர் குறளின் கருத்துக்களை நன்கு குழைத்துத் தமது கவிதைகளில் பூசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழனுடைய சிறந்த காவியக் கோவிலாகிய இராமாயணத்தை அருளிய கம்பன் திருக்குறளில் ஒர் அகப்பையும், சிந்தாமணியில் ஒர் அகப்பையும் முகந்து கொண்டுதான் தனது காவியத்தை அமைத்ததாகக் கூறுகிறான். சிந்தாமணியைப் பாடியருளிய திருத்தக்க தேவரும் பல குறள் மணிகளைத் தமது நூலில் பதித்து வைத்திருக்கிறார். இள்ங்கோ அடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் இதற்கு விலக்கில்லை. அவர்களும் தமது நூல்களில் திருக்குறள் பாக்களை எடுத்தாண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சமயத் துறையில் மாறுபட்ட பெரியார்கள் எல்லாரும் திருக்குறளை ஒரு தலை சிறந்த நூலாக எடுத்தாண் டிருக்கிறார்கள் என்றால் அதன் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ?

திருக்குறள் மணிகளை விட்டமின் மாத்திரைகளுக்கு ஒப்பிடலாம். இவ்விட்டமின் சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்று இன்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். மருந்துகளை விளம்பரப்ப்டுத்தும் ஒவ்வொரு விளம்பரங்களிலும் இச்சத்தின் இன்றியமையாமையை உணர்த்தப்படுவதை நாள், வார பிறை மாத இதழ்களைப் புரட்டிப் பார்த்தாலே தெரியும். இச்சத்து உடலில் இன்மை காரணமாகத்தான் உடலில் பல நோய்கள் உண்டாகின்றன என்று சொல்லப்படுகிறது. அந் நோய்களை Deficiency diseases என்று ஆங்கிலத்தில் குறிக்கிறார்கள். இன்று எல்லா மருந்துக்கடைகளிலும் விட்டமின் மாத்திரைகள் விற்கப்படுகின்றன. எல்லா டானிக்குகளிலும் இச்சத்து சேர்க்கப் படுகிறது. விட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நோய்கள் வராமல் தடுப்பது போலவே திருக்குறளை ஒதித் தமது வாழ்க்கையில் அதனைக் கடைப்பிடிப்பார்க்கு அக்குறள் மணிகள் உயிரைத் தொடரும் நோய்கள் அணுகாமற் காக்கின்றன என்று