பக்கம்:பல்சுவை விருந்து.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் பாடல்களில் படிமங்கள் 37

செவிப்புலப் படிமங்கள். பாவேந்தரின் முருகியல் நோக்கு செவிப் புலப் படிமங்களைப் படைப்பதிலும் செல்லுகின்றது.

கேளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம்

கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு

துளிபடத் தாவுகையில்

ஊளையிடும் குள்ளநரி

குன்றில் புகும் ஒன்றி.'

என்ற பாடற் பகுதியில் நரி ஊளையிடும் நிகழ்ச்சி காட்டப் ப்ெறுகின்றது. இதிலுள்ள செவிப் புலப் படிமத்தால் நரி ஊளை யிடும் ஒலி நம் உள் மனத்தில் கேட்கின்றது.

அகப் பொருள் இலக்கணத்தில் காதலன் - காதலி சந்திக்கும் இடத்தைக் குறியிடம் என்பார்கள். பூங்கோதை இச்செறிப்பில் இருக்கும் காலத்தில் பொன்முடியும் பூங்கோதையும் இரவில் சந்திப்பதற்காகக் குறியிடம் அமைத்துக் கொள்ளுகின்றனர். நள்ளிரவில் பூங்கோதை வீட்டின் தோட்டத்தில் புகுகின்றான் பொன்முடி. அத்தருணத்தில் காதலன்தான் வருகின்றான் என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றாள் பூங்கோதை, பலகணியின் அருகிருந்து,

வீணையிலோர் தந்தி மெதுவாய் அதிர்ந்ததுபோல்

ஆணழகன் என்றெண்ணி அத்தான் என்றாள் நங்கை' வீணையின் தந்தி அதிர்வினால் கேட்கப் பெறும் 'த்தான்' என்ற இனிய ஒலி போலவே, மெதுவாய் கூப்பிடும் பூங்கோதையின் அத்தான் என்ற ஒலியும் அமைகின்றது, அத்தான் என்ற சொல்லில் செவிப் புலப் படிமம் அமைந்து வீணையின் தந்தி ஒலியையும் பூங்கோதையின் குரல் ஒலியையும் கேட்கும் வாய்ப்பாக அமைகின்றது.

13. பா.தா.க. - 7. காடு 14. எதிர் பாரா முத்தம் - நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு