பக்கம்:பல்சுவை விருந்து.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

சாதிப்பாகுபாட்டினையும், குலப்பாகுபாட்டினையும் வேறு படுத்தி இவை அவரவர்கள் மேற்கொண்ட தொழில் ரீதியாக ஏற்பட்டது என்பதைக் கூறும்போது, சாதிகளை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டே, சாதிகளை அரசே வளர்க்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். சங்க காலத்திலே சமயம் என்பது இல்லை என்று கூறும் ஆசிரியர், ஞானசம்பந்தர், அப்பர் காலத்திலும், ஆழ்வார் பாசுரங்களிலும் சைவ, வைணவ சமய மோதல்கள் இருந்தன என்று விளக்குகிறார். அந்தக் காலத்தி லேயே மத மாற்றம் இருந்ததைக் கூறும் இவர், தாயுமான அடிகள், மற்றும் வடலூர் வள்ளலார் போன்றவர்கள் சாதி சமய எண்ணம் ஒழிய வேண்டும் என்ற தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதைக் காட்டுகின்றார். இப்பூசல்களிலிருந்து விடுபட, சாதிக் குழப்பங்களாலும், சமயப் பூசல்களாலும் அலைக்கழிக்கப்பெறும் சமுதாயம் நல்வழிப்பட ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற திருமூலரின் கருத்தினை வலியுறுத்து வதுதான் இன்றைய சமுதாய சீர்கேடுகளினின்றும் மீள்வதற்கு ஒப்பற்ற வழி என்று கூறுகிறார்.

பல்வேறு அறிஞர் பெருமக்கள், புலவர்கள் கூறியதை கூறும் இவ்வாசிரியர் வாழ்க்கைக்கு வழிகாட்டும் திருக்குறள் என்ற கட்டுரையில், சங்கப் புலவர் பரணர் கூறியதையும், மனிதன் பெறவேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களையும் பற்றி நக்கீரர் கூறியதைப் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். அனைத்தைப்பற்றிக் கூறிய வள்ளுவர், வீடு பற்றித் தெளி வாகக் குறிப்பிடவில்லை என்று கூறுவோரும் உண்டு. ஆனால்,

'அறனறிந்தேம், ஆன்ற பொருள் அறிந்தேம் இன்பின்

திறனறிந்தேம் வீடு தெளிந்தேம்' என்று திருவள்ளுவ மாலையில் கூறியிருப்பதை இங்கே கையாண்டிருப்பது நமக்கு தெளிவுபெறச் செய்கிறது. திருக்குறளை ஒரு பெட்டகத்தோடு ஒப்பிட்டு விளக்கியிருப்பதும்,