பக்கம்:பல்சுவை விருந்து.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் நகைச்சுவை 77

முறுவலித்து நகுதல்: படக்காட்சிகளில் காதலர்கள் ஒருவரையொருவர் பார்த்து நகுதல், சிறிதளவு பழக்கமுடைய நண்பர்கள் எங்காவது அவசரமாகச் சந்தித்துப் பேச நேர மில்லாத சமயங்களில் நகுதல் இதனுள் அடங்கும்.

வேத நூலில் சொல்லறந் துறத்தி லாத

சூரியன் மரபுந் தொல்லை நல்லறந் துறந்த தென்னா

நகைவர நாணுட் கொண்டான்." என்பது கம்ப நாடன் வாக்கு. தன்மீது அம்பெய்தவன் இராமன் என்று உணர்ந்து வாலி இகழ்தலைக் குறிப்பது. இல்லறந் துறந்த நம்பி, 'வில்லறந் துறந்த வீரன் என்றெல்லாம் இகழ்ச்சியாகக் குறிப்பிட்டவன், மனைவியைப் பிரிந்த கவலையால் அறிவு கலங்கி சூரிய குலத்திற்குச் சொந்தமான அரச நீதிக்கு மாறாக இராமன் தன் பக்கல் அநீதி இழைத்தமை பற்றி வாலிக்கு நகைப்பு (சிறுநகை) வருகின்றது. இராமனது பழிக்கத் தக்க செயலைக் குறித்து வாலி நாணம் கொள்ளுகின்றான். இங்கு இராமனது செயலாலான ஏளனம் பற்றிய" நகை வெளிப்பட்டுத் தோன்றி, அதனை வெளிக்காட்டாது அடக்கிக் கொள்ளுகின்றான். அளவே சிரித்தல்: இயற்கைக்கு மாறாக எதையாகிலும் நாம் உணர நேர்ந்தால் அது நம்மிடம் நகைப்பினை விளைவிக்கும். கலிங்கத்துப் பரணியில் பேய்கள் கூழட்டு உண்ணும் பகுதியில் நகைச்சுவையை விளைக்கும் நிகழ்ச்சிகள் வருகின்றன. இவற்றைப் படிக்கும்போது நாம் அளவே சிரிக்கின்றோம். ஒரு பேய் ஒட்டைக் கலத்தில் கூழ் பெற்று உண்கின்றது. கூழ் ஒழுகும் நிலையைப் பார்க்கக் கலத்தைக் கவிழ்த்துப் பார்க்கின்றது அப்பேய். கூழ் முழுதும் கொட்டிப் போகின்றது!

11. கம்பரா. கிட்கிந், வாலிவதை 72 12. எள்ளல், இளமை பேதைமை. மடன் - என்ற நான்கு காரணம் பற்றி நகை

பிறக்கும். ஈண்டு எள்ளல் பற்றி நகைத் தோன்றியது.

ப.சு - 7