பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

பல்லவப் பேரரசர்

மஹேந்திரன் திருநாவுக்கரசரை அழைத்துவர அமைச்சரைத் திருவதிகைக்கு அனுப்பினான் அல்லவா?

அரசன் - அவை

அரசன் அவையில் அமைச்சர், கற்றறிந்த சான்றோர். சேனைத்தலைவர், தூதுவர் முதலியோர் இடம் பெற்றிருந்தனர். சேனைத் தலைவரான பரஞ்சோதியார் அரச அவையில் ஆலோசனைச் சபையில் இடம் பெற்றவராவர்.

பல்லவர் படை

பல்லவ வேந்தர் யானை குதிரை, காலாட் படைகளை வைத்திருந்தனர். அப்படைகள் பல்லவப் பெரு நாட்டைச் சுற்றியிருந்த எல்லா அரசர். படைகளையும் வெல்லவல்ல பேராற்றல் பெற்றிருந்த்ன என்பதை முற்பகுதிகளிற் படித்தீர்கள் அல்லவா? போரில் வல்ல சாளுக்கியர் படைகளையே சிதற அடித்த ஆற்றல் பெற்ற பல்லவர் படைகளையும், அவற்றின் தலைவர்களான் பரஞ்சோதியார் போன்ற பெருவீரரையும் என்னென மதிப்பிடக் கூடும்!

படைத்தலைவர்

பல்லவர் படைத்தலைவரான பரஞ்சோதியார் வடமொழி, தென்மொழிகளில் வல்லவராக இருந்தார்; பல வகைச் சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றிருந்தார்; மருத்துவக்கலை நிபுணராக இருந்தார் என்ற் விவரங்களை நோக்கப் பல்லவர் படைத்தலைவர் சாதாரண வீரர் மட்டும் அல்லர் என்பதறியப்படும்.