பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

பல்லவப் பேரரசர்



தலைநகரமாகக் கொண்டு வேளிர் மரபினர் அரசாண்டனர். ‘கொல்லிமலைப் பகுதியை மழவர் மரபினர் ஆண்டுவந்தனர். கடப்பை, கர்நூல் ஜில்லாக்களின் பெரும்பகுதியை ரேநாண்டுச் சோழர் அரசாண்டனர். அவர்கள் தங்களைக் ‘கரிகாலன் மரபினர்’ என்று கூறிக்கொண்டனர். இச்சிற்றரசர் பல்லவப் பேரரசர்க்கு அடங்கியே தம் நாட்டை ஆண்டனர். பல்லவப் பேரரசர் சங்க காலத் தமிழகத்தையோ அதன் அரசியல் அமைப்பையோ சிதைக்கவில்லை; சிற்றரசர்களை ஒழித்துவிடவில்லை; சோழரது பழமையை மதித்து அவர்களைத் தனி அரசர்களாகவே மதித்துவந்தனர்.

நாடும் ஊரும்

நாடு என்பது கோட்டத்தை விடச் சிறியது; பல ஊர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்வூர்கள் அடங்கிய நாட்டை ஆண்டவர் ‘நாட்டார்’ எனப்பட்டனர். ‘ஊரார்’ என்பவர் தனித்தனி ஊரவையினர். ‘ஆள்வார்’ என்பவர் பல்லவ அரசாங்க அதிகார சபையினர். இம் மூவரும் சேர்ந்தே நாடு ஊர்களைப்பற்றிய விவகாரங்களைச் செய்துவந்தனர். தனிப்பட்டமுறையில் நாட்டார்க்குச் சில அதிகாரங்கள் உண்டு; ஊரார்க்கும் அங்ஙனமே. அரசனது ஆணை வருமாயின், இம்முத்திறத்தாரும் இருந்தே அதனை நிறைவேற்றல் வழக்கம் ஊர் அவையினர் ‘பெருமக்கள்’ எனப்பட்டனர். அவர்கள் ஊர் ஆட்சியைத் திறம்பட நடத்திவந்தனர்.

கோவில் ஆட்சி

ஊர்களிலிருந்த சிறிய கோவில்களை ஊரவையாரே கவனித்துவந்தனர்; அவற்றின் வருவாய் - செலவு - விழா