பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பல்லவப் பேரரசர்



குழப்பகால முடிவு

இக்குழப்பமான நிலைமை சிம்மவிஷ்ணு என்ற பல்லவ அரசன் காலமுதல் மறைந்துவிட்டது. அவன் காலம் முதல் பல்லவர் வரலாற்றில் தெளிவு ஏற்பட்டுவிட்டது. பல்லவர் ஆட்சியும் காஞ்சியில் நிலைபெற்றுவிட்டது. பல்லவர் ஒரு பெருநாட்டைக் கட்டியாளத் தொடங்கினர்.


3. மஹேந்திரவர்மன்
(கி.பி. 600 - 630)

சிம்மவிஷ்ணு

இவன் இடைக்காலப் பல்லவருள் இறுதி அரசன், மூன்றாம் சிம்மவர்மன் மகன். இவனுக்குப் பீமவர்மன் என்ற தம்பி இருந்தான். அவன் ஆந்திரப் பகுதியை இவனுக்கு அடங்கி ஆண்டுவந்தனன் போலும்! “சிம்மவிஷ்ணு ‘பல்லவகுலம்’ என்ற உலகினைத் தாங்கும். குலமலை போன்றவன்” என்று இவன் மகனான மஹேந்திரவர்மன் கூறியுள்ளான். இதனால் இவனது பெருவீரம் ஒருவாறு உணரலாம். மேலும் மஹேந்திரவர்மன் தன் தந்தையைப் பற்றிக் கூறுகையில், “அவன் அனுபவிக்கத்தக்க பொருள்கள் எல்லா வற்றையும் உடையவன் (போகபாக்கியங்களில் குறைவில்லாதவன்); பல நாடுகளை வென்றவன்; வீரத்தில் இந்திரனைப் போன்றவன் செல்வத்தில் குபேரனை நிகர்த்தவன். அவன் அரசர்க்கு அரசன்” என்று குறித்துள்ளான்.