பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பல்லவப் பேரரசர்



கோவிலில் அமைத்திருக்கலாம். அவனது ஆட்சிக் காலத்தில் இளவரசனாக இருந்த மஹேந்திரவர்மன் தந்தையுடன் அக்கோவிலுக்குச் சென்றிருக்கலாம். அந்நிலைமையை உணர்த்தவே அவனுடைய சிலையும் அவன் தேவியர் சிலைகளும் அங்கு அமைக்கப்பட்டன. என்பது அறிஞர் கருத்து.

வடமொழிப் புலவர் தாமோதரர்

சிம்மவிஷ்ணு சிறந்த வடமொழிப் புலவன் ஆவன். அவன் காலத்தில் கங்க நர்ட்டைத் துர்விநீதன் என்பவன் ஆண்டுவந்தான். அதே சமயத்தில் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கை நாட்டைக் கீழைச் சாளுக்கிய முதல் அரசனான விஷ்ணுவர்த்தனன் என்பவன் அரசாண்டுவந்தான். அவன் வேங்கை நாட்டை ஆளத்தொடங்கிய காலம் ஏறத்தாழ கி.பி.614 ஆகும். அந்த விஷ்ணுவர்த்தனன் அவையில் சிறந்த புலவராகவும் அவனது நண்பராகவும் இருந்தவர் தாமோதரர் என்ற வடமொழிப் புலவர் ஆவர். அவரது மறு பெயர் பாரவி என்பது. அவர், கங்க அரசனான துர்விநீதன் சிறந்த வடமொழிப் புலவன் என்பதைக் கேள்வியுற்று அவனிடம் சென்றார். துர்விநீதன் அவரை வரவேற்று அவரைத் தன் நண்பராகக் கொண்டு மகிழ்ந்தான்.

சிம்மவிஷ்ணு அவைக்களம்

ஒருநாள் வடமொழியாளன் ஒருவன் சிம்மவிஷ்ணு அவைக்களத்திற்கு வந்து நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய பெருமாள் துதி ஒன்றைப் பாடினான். அப்பாடல் சொற்சுவை-பொருட்சுவைப் பொலிவுடன் விளங்கியது. அதனை அநுபவித்து மகிழ்ந்த சிம்மவிஷ்ணு, “இதனைப் பாடிய புலவர் யாவர்?” எனக் கேட்டான். உடனே அந்த