பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

29


பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான், “அழுக்கற்ற வெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் - குடைகளையும் பிடித்துக்கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின தூளியானது எதிர்க்க வந்த பல்லவனது ஒளியை மங்கச் செய்தது. புலிகேசியின் பெரிய படைக்கடலைக் கண்டு அஞ்சிய காஞ்சி மன்னன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்.” என்று புலிகேசியின் பட்டயம் புகழ்கின்றது. பல்லவர் பட்டயங்கள் மஹேந்திரன் வெற்றி பெற்றான் என்று கூறுகின்றன. போரின் முடிவில் பல்லவர்க்கு எந்த விதமான நாட்டு இழப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆதலால், இப்போரினால் சாளுக்கியர்க்கு முயற்சி நஷ்டமும் ஆள் நஷ்டமும் பொருள் நஷ்டமும் உண்டாயின என்னலாம். எனினும், போர் எவ்வாறு நடந்து முடிந்தது என்பதைக் காண்போம்:

“துள்ளிவிழும் கயல் மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனுடைய யானைகளின் மதநீர் விழுந்ததால் ஒட்டம் தடைப்பட்டுக் கடலிற் கலக்க இயலாததாயிற்று. புலிகேசியும் பல்லவனாகிய - பனியைப்போக்கும் பகலவனாய்ச் சேர-சோழ-பாண்டியரைக் களிப்புறச் செய்தான்.” என்று . சாளுக்கியன் பட்டயம் கூறுகின்றது.

சாளுக்கியர் பட்டயம் கூறும் இரண்டு குறிப்புகளாலும், மஹேந்திரன், இரண்டாம் புலிகேசியை எதிர்த்துப் போரிட முடியாமல் காஞ்சிபுரக் கோட்டைக்குள் ஒளிந்துகொண்டான் என்பதும், அச்செயல் தமிழ் அரசரை மகிழ்வித்தது என்பதும்