பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

31



பல்லவர் - கங்கர் போர்

இரண்டாம் புலிகேசியின் தம்பியும் கீழைச்காளுக்கிய முதல் அரசனுமான விஷ்ணுவர்த்தனனுக்குக் கங்க அரசனான துர்விநீதன் தன் மகளை மணம் செய்து தந்தான். அந்த உறவினால் அவன் இரண்டாம் புலிகேசிக்கும் உறவினன் ஆனான். கீழைச் சாளுக்கிய அரசு சாலங்காயனரை விரட்டி ஏற்படுத்தப்பட்டது என்பது முன்னரே குறிக்கப்பட்டதன்றோ? அச்சாலங்காயனர் மஹேந்திர வர்மனுக்கும் அவனுடைய முன்னோர்க்கும் கொள்வனை கொடுப்பனையில் உறவுகொண்டோர் ஆவர். ஆதலின், தனக்கு வேண்டிய அரசமரபினரை ஒழித்து, இரண்டாம் புலிகேசி தன் ஆதிக்கத்தைப் பெருக்க ஏற்பாடு செய்ததை மஹேந்திரன் பார்த்துக்கொண்டிருக்க விரும்பவில்லை. அதனால் அவன், விஷ்ணுவர்த்தனன் இறந்தவுடன் அவன் மகன் பட்டம் பெறுவதைத் தடுத்துச் சாலங்காயன அரசன் பட்டத்துக்கு வர உதவிசெய்தான். அதனாற் சினங்கொண்ட துர்விநீதன் என்ற கங்க அரசன் மஹேந்திரனைத் தாக்கத் துணிந்தான். அதுவே தக்க சமயம் என்று இரண்டாம் புலிகேசியும் முனைந்தான்.


புலிகேசி முன் சொன்னபடி வடக்கே படையெடுத்து வருகையில், துர்விந்தன் பல்லவ நாட்டின் மேற்கே படையெடுத்தான். அந்தரி, ஆலத்தூர், பெருநகரம், புள்ளலூர் என்ற இடங்களில் போர் நடைபெற்றது என்று கங்கர் கல்வெட்டே கூறுகின்றது. அக்கல்வெட்டு மேலும், “துர்விநிதன் காடுவெட்டியை (பல்லவனைப் போரில் வென்று, தன்