பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பல்லவப் பேரரசர்



சமண முனிவர் மனக்குழப்பம்

தங்களிடைச் சிறந்த மதவாதியாக இருந்த தருமசேனர் திருவதிகைக்குச் சென்று மதம் மாறிய செய்தியைப். பாடலிபுரத்துச் சமண முனிவர் கேள்விப்பட்டனர் “வயிற்றுவலியைப் போக்கச் சமணரால் முடியவில்லை. அதனால் தருமசேனர் - சிவபெருமானை வேண்டினார். நோய் நீங்கிவிட்டது; அவர் உடனே சைவர் ஆனார் என்னும் செய்தி எங்கும் பரவினால், சமணத்தில் பொது மக்களுக்கு இருந்த பற்றுக்குறையும் அல்லவா? அதனால் சமணர் செல்வாக்கும் ஒழிய இடமுண்டாகும். மேலும், சிறந்த படிப்பாளியும் தர்க்கவாதியுமான தரும்சேனர் சைவப் பிரசாரத்தைப் பலமாகச் செய்யத் தொடங்கிவிடுவர். இவற்றை எல்லாம் சமண முனிவர் நன்கு யோசித்தனர்; என்ன செய்வது என்பது தெரியாமல் மனக்குழப்பம் அடைந்தனர் முடிவில் ஒருவாறு யோசனை செய்து, தம் அரசனான மஹேந்திரவர்மனிடம் சென்று கூறத்துணிந்தனர்.

சமணரும் பல்லவனும்

உடனே பாடலிபுரத்திலிருந்த சமண முனிவர் பல்லவன் கோநகரமான காஞ்சியை அடைந்தனர்; மஹேந்திரவர்மனை நேரிற் கண்டனர்; கண்டு, “அரசே! நமது தருமசேனர் சூலைநோயால் வருந்தியவரைப் போலப் பாசாங்கு செய்தார்; நாங்கள் மருந்துகள் கொடுத்தோம் மந்திரங்கள் ஒதினோம். அது தீரவில்லை என்று சொல்லி, ஒருவர்க்கும் தெரியாமல் அவர் திருவதிகை சென்று சைவராக மாறிவிட்டார்; அதனால் நினது சமயம் ஒழித்தார்” என்றனர். உடனே பல்லவன் வெகுண்டெழுந்தான் “சைவ சமயத்தைச் சேர நோயை