பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

57



முன்னதைவிடச் சிறிதளவு வேறுபட்டுக் காண்கிறது. அணி, உடைவகைகளில் வேறுபாடு இல்லை. இவ்விரு நடனமாதர்க்கும் மூக்கணி இல்லை. பல்லவர் காலப் பெண் ஒவியங்களுக்கு மூக்கணியே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இவற்றால் அறியத்தக்கன

இவ்விரண்டு ஒவியங்களாலும் அக்காலப் பெண்மணிகள் அணிந்துவந்த நகை வகைகள், உடுத்துவந்த உடை விசேடங்கள், செய்துகொண்ட கூந்தல் ஒப்பனை முறைகள், நடனக்கலை நுட்பங்கள் முதலியவற்றை ஒருவாறு அறிந்து இன்புறலாம்.

அரசன்-அரசி ஒவியங்கள்

வலப்பக்கத்துத் தூணின் உட்புறத்தில் அரசன் ஒருவனது தலையும் அவன் மனைவி தலையும் ஓவியமாகத் திட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் பலவகை மணிமாலைகள் இருக்கின்றன. காதுகளில் குண்டலங்கள் தொங்குகின்றன. தலைமீது மணிமகுடம் அழகுறக் காண்கிறது. முகம் பெருந்தன்மையும், பெருந்தோற்றமும் கொண்டதாகக் காணப்படுகிறது. இம்முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மஹேந்திரவர்மன் முகத்தை ஒத்துள்ளது. அரசி மஹேந்திரனுடைய பட்டத்து ராணியாவள். அவளது கூந்தல் ஒப்பனை செய்யப்பட்டுத் தலைமீது முடியப்பட்டுள்ளது.

கூரையில் உள்ள ஒவியம்

சித்தன்னவாசல் சிறந்த ஒவியக்கூடம் என்பதற்குப் பெரும் சான்றாக இருப்பது முன் மண்டபக் கூரை மீது