பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பல்லவப் பேரரசர்



மயங்கிக் கிடத்தல், அப்பொழுது அவன் கையிலிருந்த கபாலத்தை ஒரு நாய் கவர்ந்து ஒடுதல், அதனை அறியாத காபாலிகன் அவ்வழியே சென்ற ஒழுக்கம் கெட்டபெளத்த துறவியை வழிமறித்துப் பூசலிடல், அப்பூசலைத் தீர்க்க ஒழுக்கம் கெட்ட பாசுபதன் ஒருவன் தோன்றுதல்.இவர்கள் உரையாடல், இறுதியில் வெறியன் ஒருவனிடமிருந்து கபாலத்தைப் பெறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நாடக ரூபமாக வரையப் பட்டுள்ளன.


8. நரசிம்மவர்மன்
போர்ச் செயல்கள்

நரசிம்மவர்மன்

இவன் ஏறத்தாழ, கிபி 635இல் பட்டம் பெற்றான் என்னலாம். இவனது வரலாறு மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளைக் கொண்டது. இவன் இரண்டாம் புலிகேசியை வென்ற பெருவீரன்; அவனை வென்று, சாளுக்கியர் கோநகரையே கைப்பற்றியவன்; இரண்டுமுறை இலங்கை மீது படையெடுத்தவன்; சிறந்த கடற்படை பெற்றவன் மஹாபலிபுரத்தைப் புதுப்பித்து அதற்கு ‘மஹாமல்லபுரம்’ என்று தன் பெயரிட்டவன்; பல்லவப் பெருநாட்டின் பல பகுதிகளில் ஒற்றைக்கல் கோவில்களை அமைத்தவன்; கோட்டை கொத்தளங்களைக் கட்டியவன். இவன் காலத்திற்றான் புகழ்பெற்ற சீன யாத்ரிகரான ஹியூன்ஸங் என்பவர் காஞ்சிக்கு வந்து தங்கி இருந்தார். இப்பேரரசன் காலத்திற்றான் திருஞான சம்பந்தர் பல்லவர்க்குட்பட்ட சோழ நாட்டிலும், பாண்டிய