பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

பல்லவப் பேரரசர்



பல்லவன் அதனை விட்டிலன். அவன் சாளுக்கியனை விரட்டிச் சென்றான்; புலிகேசி பல்லவ நாட்டைக் கடந்து தன் நாட்டிற்குள் ஒடி ஒளிந்தான். எனினும், பல்லவர் படை விட்டிலது. அது சாளுக்கிய நாட்டைப் பாழாக்கி, அதன் தலைநகரமான புகழ்பெற்ற வாதாபியைக் கைப்பற்றியது; நகர நடுவிடத்தில் வெற்றித்துாண் ஒன்று நாட்டப்பட்டது. அதனில். நரசிம்மவர்மன் பெயர் பொறிக்கப்பட்டது.

இப்போரில் கலந்துகொண்டவர்

‘இரண்டாம் புலிகேசி பகை அரசர் மூவரால் தோற்கடிக்கப்பட்டான்’ என்று சாளுக்கியர் பட்டயம் கூறுகின்றது. அதில் குறிக்கப்பட்ட மூவர் யாவர்? ஒருவன் பல்லவப் பேரரசனான நரசிம்மவர்மன், மற்றொருவன் அவனது மரபினனும் ஆந்திரநாட்டைப் பல்லவனுக் கடங்கி ஆண்டுவந்த (சிம்மவிஷ்ணு தம்பி மரபினனான பல்லவ அரசனாக இருக்கலாம். மூன்றாம் அரசன் யாவன்? அவனே மானவன்மன் என்ற இலங்கை அரசன். அவன் பகைவனால் அரசிழந்து இலங்கையை விட்டுப் பல்லவனிடம் உதவிக்காக வந்தவன். அவன். பல்லவனுடன் காஞ்சியில் தங்கியிருந்த பொழுதுதான் இரண்டாம் புலிகேசி படையெடுத்தான். ஆகவே, மானவன்மன் பல்லவன் படைகளில் ஒரு பகுதிக்குத் தலைமை பூண்டு போர் புரிந்திருக்கலாம்.

பல்லவர் பட்டயங்கள்

இப்பல்லவர் சாளுக்கியர் போரைப்பற்றிப் பல்லவர் ப்ட்டயங்கள் கூறுவன கவனிக்கத்தக்கன.

1. “இப்பல்லவர் மரபில், கீழ்மலையிலிருந்து! சூரியனும் சந்திரனும் தோன்றினாற்போல நரசிம்மவர்மன்