பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

பல்லவப் பேரரசர்



3. அர்ச்சுனன் தேர்

இது தருமராஜன் தேரைப்போன்றது.இதுவும் சிவன் கோவிலே ஆகும். இது புத்தப்பள்ளி அமைப்பைக் கொண்டுள்ளது; பதினொரு சதுர அடிஅமைப்புடையது. இதன் விமானம் நான்கு நிலைகளைக் கொண்டதாகும்.

4. சகதேவன் தேர்

இது பெளத்தர் கோவிலைப்போன்ற அமைப் புடையது. சாளுக்கிய நாட்டில் ‘அய்ஹொளே’ என்னும் இடத்தில் உள்ள துர்க்கையின் கோவில் இந்த அமைப்புடன் காண்கின்றது. இதுபோன்ற விமானம் திருத்தணிகையில் இருக்கின்றது. அது ‘துரங்கானை மாடம்’ போன்ற அன்மப்புடையது.

5. திரெளபதி தேர்

இது கிராமதேவதையின் கோவில் போன்றது. இதன் அடித்தளம் பதினொரு சதுர அடி உயரம் பதினெட்டு அடியாகும். இங்குள்ள துர்க்கைச் சிலையில் அமைந்துள்ள வேலைப்பாடு வியக்கத்தக்கது. கல்யானை, கல்சிங்கம், நந்தி என்பன பார்க்கத்தக்கவை: அழகிய உருவில் அமைந்திருப்பவை.

III. சிற்பங்கள்

மகிடாசுர மண்டபம்

துர்க்கையம்மன் மகிடாசுரனைக் கொல்வதாகக் காட்டப்பட்டுள்ள சிற்பம் நரசிம்மவர்மன் காலத்தில் வேறெந் நாட்டிலும் காணப்படாததாகும். எனவே, அது