பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

பல்லவப் பேரரசர்



அமைத்த கோட்டை ஒன்று இருந்தது. அஃது இப்பொழுது முழுவதும் அழிந்து மறைந்து விட்டதெனினும், அதன் அடிப்படையை இன்றும் அங்கு காணலாம். பல்லவர் காலத்துப் பெரிய செங்கற்கள் இன்றும் கிடைக்கின்றன. அப் பல்லவபுரக் கோட்டை பல்லவப் பெருநாட்டின் தென்பகுதியைக் காக்க உதவியாக இருந்தது.


சீன யாத்ரிகர்

புத்தர் பெருமான் அருள் சமயமாகிய பெளத்த சமயம் சீன நாட்டில் பரவினது. சீனர் பலர் பெளத்த பிக்ஷுக்கள் ஆயினர். அவருட் சிலர் புத்தர் பெருமான் பிறந்து வளர்ந்த இந்திய நாட்டை நேரில் கண்டு மகிழ இந்தியாவிற்கு வந்தனர்; வட இந்தியாவில் பெளத்த க்ஷேத்திரங்களாக இருந்த இடங்கட்கெல்லாம் சென்று பார்வையிட்டனர்; அங்ஙனமே தென் இந்தியாவையும் பார்வையிட முனைந்தனர். பெளத்த சமயம் பரவியிருந்த சுமத்ரா, ஜாவா முதலிய தீவுகளுக்கும் சென்றனர்: அங்கங்குத் தாம் தாம் கண்டவற்றைத் தம் குறிப்புப் புத்தகத்தில் எழுதிச் சென்றனர். அங்ஙனம் யாத்திரை செய்த சீன பிக்ஷுக்களில் குறிப்பிடத்தக்கவர் இருவர்; ஒருவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்தியா வந்த பாஹியான் என்பவர் மற்றவர் ஹியூன்-ஸங் என்பவர். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இன்டப்பகுதியில் யாத்திரை செய்தவர்.


ஹியூன்-ஸங்

இவர் இந்தியா வந்தபொழுது வட இந்தியாவில் ஹர்ஷன் பேரரசனாக இருந்தான். அவன் பெளத்த