பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

பல்லவப் பேரரசர்



இருந்தமை தெளிவாகும். சைவத்தில் காபாலிகம், பாசுபதம், காலா முகம் முதலிய உட்பிரிவுகள் இருந்தன என்பதும் வெளியாகின்றது.

சமண சமயம்

இது சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம் என இருவகைப்படும். இவற்றில் திகம்பர சமணமே தீவிரமான சமயக்கொள்கைகைள உடையது. அதனைச் சேர்ந்த துறவிகளில் ஒருவராகவே திருநாவுக்கரசர் இருந்தார். திருநாவுக்கரசர் சைவராகத்திற்குமுன் இவர்கள் செல்வாக்கு தமிழ்கம் முழுவதும் நன்றாகப் பரவி இருந்தது. இவர்களை மஹேந்திரன் உள்ளிட்ட பல்லவ அரசர் சிலர் ஆதரித்துவந்தனர். மஹேந்திரன் சைவன் ஆனது முதல் சமணர் செல்வாக்கு ஒடுங்கிவிட்டது. ஆயினும், தென்னார்க்காடு ஜில்லா, வடஆர்க்காடு ஜில்லா, புதுக்கோட்டைச்சிமை, தஞ்சாவூர் ஜில்லா, செங்கற்பட்டு ஜில்லா ஆகிய இவ்விடங்களில் அங்கங்குச் சமணர் வாழ்ந்துவந்தனர். சமணருள் பெண் துறவிமார் உண்டு. அவர்கள் கந்தியர், குர்த்திமார் எனப்பட்டனர். அவர்களைக்கொண்ட மடங்கள் சில: பல்லவ நாட்டில் இருந்தன. சமணர்கள் பாலி, வடமொழி நூல்களில் வல்லவர்கள் தர்க்கவாதத்தில் இணையற்றவர்கள்.

பெளத்த சமயம்

பெளத்தர்கள் அசோகன் காலமுதல் தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் சமயக் கொள்கைகள் நாட்டில் நன்றாகப் பரவி இருந்தன. சங்க காலச் சோழர், காஞ்சியில் பெளத்த சம்யத்தைப் பெருமைப் படுத்தினார்கள். மணிமேகலை என்பவள் பெளத்த