பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

பல்லவப் பேரரசர்



சாலைகளை வைத்துப் பொதுமக்கட்குத் தொண்டு செய்தனர்; வெளியூர் அடியார்கள் வந்து தங்க மடங்களில் வசதி செய்துவந்தனர். சிவனடியார்களைச் சிவபெரு மானாகவே கருதி மரியாதையுடன் நடந்து வந்தனர். இத்தகைய் நற்செயல்களால் சைவர்க்குள் ஒற்றும்ையும் சமயப்பற்றும் ஓங்கி வளர்ந்தன. சைவ சமயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தது.

கோவில்கள்

கோவில்கள் செங்கல், மண், மரம், உலோகம் இவற்றால் ஆகியவை. இவை ஏறத்தாழ இருநூற்றுக்கு மேற்பட்டவை. இவை பல்லவர்க்கு முற்பட்ட கோவில்கள் ஆகும். இவற்றுட் பல கோவில்களில் இசையும் நடனமும் வழக்கில் இருந்தன.

“பண்ணியல் பாடல அறாத ஆவூா
“மாதர் விழாச் சொற்கவிபாட ஆவூர்”
“கோவில் விழாவில் அரங்கேறிக்கொடியிடை
மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந் தேத்தும் ஆவூர்”
“தையலார் பாட்டோவாச் சாய்க்காடு”

என வரும் சம்பந்தர் கூற்றால் கோவில்களில் இசை வளர்க்கப்பட்டமை அறியலாம்.

“தேனார் மொழியார் திளைத்தங் காடித் திகழும்
குடமூக்கில்”
“வலம் வந்த மடவார்கள் நடம் ஆட....”
“முழவம் மொந்தை குழல்யாழ் ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர்
ஏரார்பூங் கச்சி”