பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

93



எனவரும் தேவார அடிகளால் கோவில்களில் நடனம் வளர்ச்சி பெற்றதை நன்கறியலாம். இவையன்றித் திங்கள்தோறும் விழாக்கள் நடைபெற்றன. இவை அனைத்தும் மக்கள் உள்ளத்தை ஈர்த்தன. மக்கள் சைவ சமயத் தேனைப் பருகும் ஈக்கள் ஆயினர்.

சைவக் கிளைச் சமயங்கள்

சமயம் வளரவேண்டும் என்ற முறையில் அக்காலச் சமயக் குரவர் பலவகைப்பட்ட சைவக் கிளைச் சமயத்தாரையும் கலந்துகொண்டனர் போலும் அச்சமயங்கள் வடநாட்டிலிருந்துவந்து புகுந்தவை. அவையே காபாலிகம், பாசுபதம், காலாமுகம் முதலியன. அவற்றைப் பின்பற்றிய மக்களின் பெயர்களைக் காணின், அவை தேவ சோமா முதலிய வடநாட்டுப் பெயர்களாகவே காண்கின்றன. அவர்கள் சமயக் கொள்கைகட்கும். பழக்கவழக்கங்கட்கும் திருநாவுக்கரசரது அன்பு கலந்த சைவ சமயக் கொள்கைகட்கும் பழக்கங்கட்கும் சிறந்த வேறுபாடுகள் காண்கின்றன.

காபாலிகர்

இவர்கள் பைரவரை வழிபட்டவர்: மண்டை ஒடுகளை மாலைகளாக அணிந்தவர்; எல்லா உயிர் களையும்பைரவருக்குப் பலியிட்டவர்; இறைச்சியையும் மதுவையும் உட்கொண்டவர்; பெண்களைச் சக்தி என வழிபட்டவர். இவர்களால் சக்தி வணக்கம் வளர்ந்தது. காபாலிகர்க்குக் கபாலம் இன்றியமையாதது. அஃது இல்லாமல் காபாலிகன் தனித்து இரான். இவர்கள் உடல்முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டவர்.இவருள்