பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

பல்லவப் பேரரசர்



பெண்பாலரும் இருந்தனர். இருபாலரும் வேற்றுமை இன்றிப் பழகினர். சிறுத்தொண்டர் காபாலிகச் சைவரே ஆவர்.

பாசுபதர்

இவர்கள் ‘மஹேஸ்வரர்’ என்றும் கூறப்படுவர். இவர்கள் திருநீறு அணிந்து லிங்க பூசை செய்பவர்; சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டிருப்பவர். இவருட் சிலர் மொட்டை அடித்திருப்பர் சிலர் குடுமி வைத்திருப்பர் வேறு சிலர் மயிரைக் கத்திரித்து விடுவர். சிலர் உடம்பு முழுவதும் நீறணிந்து நடமாடுவர். இவர்கள் தவமுயற்சி மேற்கொண்டவர்கள்; சிவ கணங்களிடம் நம்பிக்கை கொண்டவர்கள்; அவற்றைத் திருப்தி செய்ய உயிர்களைப் பலியிடுவார்கள், இறைச்சி படைத்து அதனையே உண்பார்கள்.

காலாமுகர்

இவர்கள் சிறந்த படிப்பாளிகள் சமய நூல்களைக் கற்ற பேரறிஞர்கள் பக்தி முறையைப் பின்பற்றியவர்கள்: இறைவனைப்பற்றிப் பாடலும் மெய்ம்மறந்து ஆடலும் மேற்கொண்டவர்கள், மந்திரம் செபிப்பவர்கள். இவருள் ஒரு சாரார் மஹாவிரதியர் (கடுநோன்பிகள்), எனப்பட்டனர். அவர்கள் மண்டை ஒட்டில் உணவு கொள்வர்; உடல் முழுவதும் பினச் சாம்பலைப் பூசுவர் அச்சாம்பலைத் தின்பர் மதுப் பாத்திரம் வைத்திருப்பர் தண்டேந்தித் திரிவர்.

இங்ஙனம் பலதிறப்பட்ட சைவர்களும் பல்லவ நாட்டில் இருந்தனர். இவர்கள் நிலையைத்