பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பல்லவர் வரலாறு



அவர் மைந்தர் தாமோதரன் என்பவர். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப்பட்டார். அப் புலவர் (கீழைச் சாளுக்கிய) விஷ்ணுவர்த்தனுக்கு நண்பர் ஆனார். ஒருநாள் அவர் அவ்வரசனைத் தொடர்ந்து காட்டிற்குச் சென்றார். அரசன் வேட்டையாடி விலங்கிறைஞ்சி தின்றான். புலவரையும் தூண்டித் தின்னச் செய்தான். அப்பாவத்தைத் தொலைக்க அப் புலவர் புறப்பட்டுப் பல இடங்கட்கும் சென்றார். இறுதியில் (கங்க அரசனான) துர்விநீதன் அவையைஅடைந்தார். இப்பொழுது அங்கு இருந்தவருகிறார். நான் பாடிய பாடல் அப் பெரும் புலவர் பாடியதே ஆகும்’ என்றான்.”

புலவர் புரவலன்

உடனே சிம்மவிஷ்ணு ஆட்களைப் போக்கிப் பாரவியைத் தன் அவைக்கு வருமாறு பலமுறை தூண்டினான். பாரவி காஞ்சி நகரம் வந்து சேர்ந்தார். அரசன் அவருக்கு நல்ல விடுதி ஒன்றை அளித்துப் பிற வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தான். பாரவி தம் புலமையால் அரசனை மகிழ்வித்து, ஓய்வு நேரங்களில் பாக்கள் இயற்றிக்கொண்டிருந்தார்.[1]

இவன் காலத்து அரசர்

சாளுக்கியநாட்டில் கி.பி.509இல் அரியணையேறிய இரண்டாம் புலிகேசி அரசனாக இருந்தான்; அவன் கி.பி. 642 வரை ஆண்டான். கங்க நாட்டைத் துர்விநீதன் (கி.பி. 605-650) என்பவன் ஆண்டு வந்தான். தெற்கே மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டியன் (கி.பி. 600-625) பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். நாசிக்கிலும் வேங்கி நாட்டிலும் விஷ்ணுவர்த்தனன் என்பவன் (கி.பி.614-635) ஆண்டு வந்தான்.


  1. Dr. N. Venkataramanaayya’s article on “Mahendravarman I and pulikesin II’ M.E R. 1921, p.48.