பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

பல்லவர் வரலாறு



2

இரண்டாம் கீர்த்திவர்மன் கி.பி. 748இல் சாளுக்கிய அரசனானான். அவன் பட்டயத்தில், அவன் இளவரசனாக இருந்தபொழுது நடந்த போரே குறிக்கப்பட்டுள்ளது. அவனது ஆட்சியில் கி.பி.757இல் பல்லவர் - சாளுக்கியர் போர் பலமாக நடந்தது. இம்முறை நந்திவர்மன் கங்கரையும் பாண்டியரையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டான். இப்போர் வெம்பை என்ற இடத்தில் முற்றுப்பெற்றது. கீர்த்திவர்மன் போரில் இறந்தான்; அவனுடன் சாளுக்கியப் பேரரசு ஒழிந்துவிட்டது.[1]

[2]இரட்டர் - பல்லவர் நட்பு

இரண்டாம் கீர்த்திவர்மன் ஆட்சியில் இரட்ட மரபினன் ஒருவன் சிற்றரசனாக இருந்தான். அவன் பெயர் தந்திதுர்க்கன் என்பது.அவன் நந்திவர்ம பல்லவன் அன்பைப் பெற்றுச் சாளுக்கிய நாட்டைக் கைப்பற்றினான்; அவன் கி.பி.725முதல் 758வரை இருந்த இரட்ட மரபின் முதல் மன்னன் ஆவன்.

தந்தி துர்க்கன் என்பவன் வைரமேகன் என்னும் மறுபெயர் உடையவன்.[3] அவன் காஞ்சியை வென்றதாகக் கல்வெட்டுக் கூறுகிறது.[4] அந்த வைரமேகனையும் பல்லவ மல்லனையும் காஞ்சியில் கண்டதாகத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.[5] எனவே, இருவரும் சமாதான நிலையில் காஞ்சியில் இருந்தனர் என்பது கொள்ளவேண்டுவதாக உள்ளது. ‘நந்திவர்மன் மனைவி ரேவா, அவள் மகன் தந்திவர்மன்’ என்று வேலூர் பாளையப்பட்டயம் பகர்கின்றது. இவற்றை நன்கு ஆராய்ந்த அறிஞர், ‘இரட்ட அரசனான


  1. Ep. Ind Vol.IX p.24; Q.J.M.S. Vol.XIII, pp. 581-88, MVK Rao’s “Gangas of Talakad’.
  2. இரட்டர்-இரட்டிரகூடர்
  3. E.I. Vol.IV p334.
  4. E.I. Vol.IX, p24
  5. பெரிய திருமொழி, 9, “மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீள்முடிமாலை வயிரமேகன்”