பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

பல்லவர் வரலாறு



சாணக்கியன் தனது பொருள் நூலில் கொற்கையைக் குறிப்பிட்டுள்ளான். கடைச் சங்க காலப் பாண்டியருள் சிறந்தவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சிலப்பதிகாரத்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவரே ஆவர்.

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் (கி.மு. 60 - கி.பி.200)


சோழ நாடு

சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளிக் கோட்டங்களும், கீழ்க் கடற்கரை வெளியும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இந்த நாட்டைச் சோழர் என்பவர் நெடுங்காலமாக ஆண்டு வந்தார். இவர் தலைநகரம் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. கி.மு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/22&oldid=583696" இலிருந்து மீள்விக்கப்பட்டது