பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

245



‘விடை போற்பட்ட’[1] இருவர் நினைவாகப் பாண அரசன் ஒருவன் பிடாரி கோவிலுக்குப் பணம் அளித்தான் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[2] இது தந்திவர்மன் காலத்துச் செய்தியாகும்.

நிருபதுங்கன் காலத்து வீரக்கற்கள் இரண்டு ஆம்பூரில் கிடைத்துள்ளன. ஒவ்வொன்றிலும் மேலே தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இறந்த வீரன் தன் இடக்கையில் வில்லும் வலக்கையில் வாளும் ஏந்தியுள்ளன். அவன் அம்புகள் தைத்த நிலையில் காண்கின்றான். அவன் தலை இரண்டு கவரிகட்கிடையே காண்கின்றது. இதன் குறிப்பு, அவன் வீரசுவர்க்கம் அடைந்தான் என்பதாகும். அவனுக்குப் பின்புறம் ஒரு கூடையில் பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு வீரற்கு எதிரில் விளக்கும் பின்புறம் பானை ஒன்றும் விளக்கு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இறந்தார்க்கு வைக்கும் வழிபாட்டுப்பொருள்கள் ஆகும். வீரர் இருவரும்அ அகளங்ககாடவராயன் பிள்ளையும் தமையன் மகனும் ஆவர்.[3]

நித்தார் நினைவுக் குறிகள்

நீத்தார்க்குக் கோவில் கட்டல் நாட்பட்ட வழக்கம் என்பதை விரக்கல் கொண்டும் கண்ணகி கோவில் கொண்டும் நன்கறியலாம். இங்ஙனம் கோவில் கட்டும் பழக்கம் பல்லவர் காலத்தும் இருந்தது. செங்கற்பட்டுக் கோட்டம் பொன்னேரிக் கூற்றத்தைச் சேர்ந்த சத்தியவேடு என்னும் சிற்றுளில் உள்ள ‘மதங்கப்பள்ளி’ இங்ஙனம் அமைந்ததே ஆகும். அஃது இன்று சிவன் கோவிலாக இருந்து வருகிறது. மதங்கன் பெரிய சிவனடியராக இருந்து இறந்தவர் போலும்.[4]


  1. ‘எய்போற் கிடந்தான் என் ஏறு’ - பு.வெ.மாலை.
  2. 283 of 1916.
  3. Ep. Ind. Volp.130
  4. K.V.S. Iyer’s “History of Ancient Dekkan’ pp. 384-385.